வீட்டில் முடங்கியிருக்கும் ரசிகர்களுக்கு மாஸ்டர் படக்குழுவினர் அளித்த பரிசு! புதிய பாடல் வெளியீடு!!

 

வீட்டில் முடங்கியிருக்கும் ரசிகர்களுக்கு மாஸ்டர் படக்குழுவினர் அளித்த பரிசு! புதிய பாடல் வெளியீடு!!

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, சென்னை, நெய்வேலியில் நடைபெற்றது.  மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 15 ஆம் தேதி சென்னை பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றுவருகிறது. 

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் வில்லன் விஜய் சேதுபதி அறிமுக பாடலான ‘பொளக்கட்டும் பற பற’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.