வீட்டில் தொடர் மரணங்கள் … 30 ஆண்டுகளாக பெண் போல வேடமணிந்து வாழ்ந்து வரும் கணவர்!

 

வீட்டில் தொடர் மரணங்கள் … 30 ஆண்டுகளாக பெண் போல வேடமணிந்து வாழ்ந்து வரும் கணவர்!

சவுஹானின்  இரண்டாவது திருமணம் குறித்த தகவல் அவரது குடும்பத்தாரின் காதுக்கு எட்ட, அவர்களோ உடனே சொந்த ஊர் திரும்புமாறு  கூறியுள்ளனர். 

30  ஆண்டுகளாக  ஆண் ஒருவர் பெண் வேடமணிந்து வாழ்ந்து வரும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரேத மாநிலம் ஜலல்பூர் அருகே ஹவுஸ்காஸ் பகுதியைச் சேர்ந்தவர் சின்தாஹரன் சவுஹான்.  66 வயதாகும் இவருக்கு 14 வயதில் திருமணம் நடந்துள்ளது. இவரது முதல் மனைவி நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாக, வேலைநிமித்தமாக மேற்குவங்கம் சென்று இவருக்கும் மளிகை கடைக்காரர் ஒருவரின் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.  சவுஹானின்  இரண்டாவது திருமணம் குறித்த தகவல் அவரது குடும்பத்தாரின் காதுக்கு எட்ட, அவர்களோ உடனே சொந்த ஊர் திரும்புமாறு  கூறியுள்ளனர். 

marriage

இதனால் காதல் மனைவியை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு  சவுஹான் வந்துள்ளார். இதையடுத்து அவரின் முதல் மனைவி இறக்க, அவருக்கு மூன்றாவது திருமணமும் நடந்துள்ளது. ஆனால் இதில் பெரும் சோகம் என்னவென்றால், கணவன் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்று எண்ணிய அவரது இரண்டாவது மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் ஒருவருடம் கழித்தே  சவுஹானுக்கு தெரியவந்துள்ளது. 

death

இதன்பிறகு  சவுஹான் வீட்டில் தொடர் மரணங்கள் அரங்கேறியுள்ளது. மூன்றாவது திருமணமான சில நாட்களில் சவுஹானுக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. மேலும் குடும்பத்தில் ஒவ்வொருவராக மரணமடைந்துள்ளனர்.  அப்பா, சகோதரர், அண்ணி, அவர்களின் 2 மகன்கள், சவுஹான் சகோதரரின் மூன்று மகள்கள், மகன் ஆகியோர் திடீரென உயிரிழந்துள்ளனர். இதனால் அவர்கள் வீட்டில் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. இதன்பின்னர் சவுஹான் பெண்  வேடம் அணியத் துவங்கியுள்ளார். 

marriage

இதுகுறித்து கூறியுள்ள சவுஹான், எங்கள் வீட்டில் நடந்த தொடர் மரணங்களுக்குப் பின்னர் என் கனவில் என் இரண்டாவது மனைவி தோன்றினாள். தனக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறி  கதறி அழுதாள். நான் அவளிடம் மன்னிப்பு கேட்டேன். என்னையும் என் குடும்பத்தையும் விட்டுவிடு, உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்றேன்.  அப்போது அவள், என்னை உன்னுடன் வைத்துக்கொள். நீ மணமகள் போல உடை அணிய வேண்டும். அதை அணிந்துகொண்டே எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்றாள். அதிலிருந்து நான் பெண் போல மூக்குத்தி, கம்மல், கொலுசு என அனைத்தையும் அணிந்து கொண்டே வெளியில் செல்கிறேன். அதன்பிறகு என் வீட்டில் மரணங்கள் ஏற்படவில்லை. ஆரம்பத்தில் என்னை பார்த்து அனைவரும் சிரித்தார்கள். இப்போது என் நிலையை அவர்கள் புரிந்து கொண்டார்கள்’ என்றார். 

சவுஹானுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இவரின்  மூன்றாவது மனைவி சமீபத்தில் இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.