வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் இதுதான் : தமிழக அரசு

 

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்  கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் இதுதான் : தமிழக அரசு

199 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.  அதேபோல் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,412 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை  கொரோனா தொற்றால் 199 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.  அதேபோல் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ttt

இந்நிலையில், வீட்டில் தனிமைப்பட்டு உள்ளவர்களின் குடும்பத்தினர்  கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவை  பின்வருமாறு:-

  • தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய ஒரு காற்றோட்டமான தனி அறை ஒதுக்க வேண்டும்.
  • எக்காரணம் கொண்டும் வீட்டைவிட்டு தனிமைப்படுத்தப்பட்ட நபர் வெளியில் செல்லக்கூடாது
  • தினமும் மூன்று முறையாவது கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்
  •  வீட்டில் உள்ள அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும்
  • தனிமைப்படுத்தப்பட்ட நபருடன் முதியவரும் அல்லது கர்ப்பிணி பெண்களும் அல்லது குழந்தைகளோ எந்தவித தொடர்பும் இல்லாமல் இருத்தல் நல்லது
  • தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பொருட்களை மற்றவர்கள் உபயோகப்படுத்தக் கூடாது
  • உடை, படுக்கை விரிப்பை உதிராமல் தனியாக சோப்பு போட்டு நீரில் ஊறவைத்து துவைக்க வேண்டும்.
  • தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் வீட்டுக்குள்ளே அங்கேயும் இங்கேயும்செல்லாமல் ஒரு அறையிலேயே இருக்க வேண்டும்