வீட்டில் தங்குவதற்கான உத்தரவுக்கு எதிராக வாஷிங்டன் ஸ்டேட் கேபிட்டலில் 2,500 பேர் போராட்டம்

 

வீட்டில் தங்குவதற்கான உத்தரவுக்கு எதிராக வாஷிங்டன் ஸ்டேட் கேபிட்டலில் 2,500 பேர் போராட்டம்

வீட்டில் தங்குவதற்கான உத்தரவுக்கு எதிராக வாஷிங்டன் ஸ்டேட் கேபிட்டலில் 2,500 பேர் போராட்டம் நடத்தினர்.

வாஷிங்டன்: வீட்டில் தங்குவதற்கான உத்தரவுக்கு எதிராக வாஷிங்டன் ஸ்டேட் கேபிட்டலில் 2,500 பேர் போராட்டம் நடத்தினர்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஜனநாயகக் கட்சி ஆளுநர் ஜே இன்ஸ்லீ வீட்டில் தங்குவதற்கான உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டன் மாநில தலைநகரில் 2,500 பேர் திரண்டனர். அவர்களை முககவசம் அணியுமாறு பேரணி அமைப்பாளர்களிடமிருந்து வேண்டுகோள் விடுத்த போதிலும் பலர் அவ்வாறு செய்யவில்லை.

இந்த கூட்டத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக போலீசார் மதிப்பிட்டனர். இது கடந்த வாரங்களில் ஊரடங்குக்கு எதிராக அமெரிக்க மாநிலங்களில் நடந்த மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாகும். ஒலிம்பியாவில், கொரோனா வைரஸ் தொற்று நாவலின் போது நூற்றுக்கணக்கானவர்கள் கேபிடல் கட்டிடத்தின் படிகள் மற்றும் ஒரு நீரூற்றைச் சுற்றிலும் கூடி, மாநில மற்றும் கூட்டாட்சி சுகாதார வழிகாட்டுதல்களை மீறினர். மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனங்களை மாநில தலைநகருக்கு ஓட்டிச் சென்று ஹாரன் ஒலியை எழுப்பி தெருக்களில் வலம் வந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

usa

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40,565-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 764,265 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் மக்கள் கொத்து, கொத்தாக கொரோனா தொற்றால் இறந்து கொண்டிருக்கின்றனர். இதனால் உலகின் வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவின் நிலை பரிதாபகரமாக மாறியுள்ளது.

மேலும் முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும் தற்போது அந்த நாட்டில் பெருமளவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 24 லட்சத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 6 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர்.