வீட்டில் இருந்தே போன் செய்து மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.. புதிய திட்டம் மதுரையில் அமல்!

 

வீட்டில் இருந்தே போன் செய்து மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.. புதிய திட்டம் மதுரையில் அமல்!

கொரோனாவால் அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், பல நிறுவனங்கள் முடங்கியுள்ளன. 

தமிழகத்தில் 26 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15,000 க்கும் மேற்பட்டோர் அவரவர்  வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்டோரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொரோனாவால் அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், பல நிறுவனங்கள் முடங்கியுள்ளன. 

ttn

ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க மாநில அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்ப்பதற்காக போன் மூலம் ஆர்டர் செய்தால், மளிகை பொருட்களை வீட்டிலேயே சென்று டெலிவரி செய்யும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது மதுரை மாநகராட்சியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வீட்டிலிருந்து ஆர்டர் செய்வதற்கான மொபைல் எண்களும், ஆர்டர்கள் அனுப்பப்படும் 17 இடங்களின் முகவரிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.