வீட்டிலே சொகுசாக உட்கார்ந்து கொண்டு சம்பளம் வாங்கிய அரசு ஊழியர்..!

 

வீட்டிலே சொகுசாக உட்கார்ந்து கொண்டு சம்பளம் வாங்கிய அரசு ஊழியர்..!

அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் வீட்டிலே சொகுசாக அமர்ந்து கொண்டு 2 வருடமாகச் சம்பளம் வாங்கி வந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அரசு சம்பளமுன்னா சும்மாவா.. போனா கவர்மெண்ட் வேலைக்குத் தாண்டா போனும் என எண்ணிக் கொண்டு இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் வேளையில், அரசுப் பணியில் அமர்ந்திருப்பவர்கள் கிடைத்த வேலையைக் கூட சரியாகச் செய்வதில்லை. அரசு அலுவலகங்களில் பணி புரிபவர்களின் மெத்தனப் போக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. உடல் நிலை சரியில்லை என்றால் மெடிக்கல் லீவ் எடுத்துக் கொள்ளலாம், அதிக பட்சமாக 6 மாதம் வரை அரசு அலுவலகங்களில் மெடிக்கல் லீவ் வழங்கப்படும். அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் வீட்டிலே சொகுசாக அமர்ந்து கொண்டு 2 வருடமாகச் சம்பளம் வாங்கி வந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Nirmala

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் பணிபுரியும் நிர்மலா என்பவருக்கு வயது 57 ஆகிறது. பணியிலிருந்து ஓய்வு பெரும் நிலையில் இருக்கும் அவர், இரண்டு வருடங்களுக்கு முன்னர் காலில் சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காக மெடிக்கல் லீவ் எடுத்துள்ளார். அதன் பின், அறுவை சிகிச்சை முடிந்த பின்னரும் நிர்மலா அலுவலகத்திற்குச் செல்லவில்லை. 

அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகம்

தொடர்ந்து இரண்டு வருடங்களாக வீட்டிலே இருந்து கொண்டு, மாத இறுதியில் மட்டும் அலுவலகத்திற்குச் சென்று வருகைப் பதிவேட்டில் அனைத்து நாளும் வந்துள்ளதாகக் கையெழுத்துப் போட்டுவிட்டுச் சென்றுவிடுவாராம். நிர்மலாவின் உறவினர் ஒருவர் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால் அவரின் உதவியோடு நிர்மலா வீட்டிலிருந்தபடியே சம்பளம் வாங்கிக் கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து, நிர்மலாவும் அவரது கணவரும் நிர்மலா செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. 

அலுவலகத்திற்கு அதிகாரிகள் வருகிறார்களா இல்லையா என்று கூட சோதிக்காமல் சம்பளம் வழங்கும் அரசு, அரசு வேலையை அலட்சியப் போக்காக எடுத்துக் கொண்ட நிர்மலா என இரு தரப்பினரிடையேயும் தவறு நிகழ்ந்துள்ளது. இந்த முறைகேட்டிற்காக நிர்மலா மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.