வீட்டிலேயே செய்யலாம் பீட்ஸா தோசை!

 

வீட்டிலேயே செய்யலாம் பீட்ஸா தோசை!

தேவையான பொருட்கள்
ஒரு தோசைக்கு தேவையான அளவு
தோசை மாவு -1கப்
துருவிய சீஸ் -2 டேபிள் ஸ்பூன்
பீட்ஸா சாஸ் -1டேபிள் ஸ்பூன்
வெங்காயம் -தேவையான அளவு
கேப்சிகம் -தேவையான அளவு
தக்காளி -தேவையான அளவு
ஆரிகானோ -தேவையான அளவு

தேவையான பொருட்கள்
ஒரு தோசைக்கு தேவையான அளவு
தோசை மாவு -1கப்
துருவிய சீஸ் -2 டேபிள் ஸ்பூன்
பீட்ஸா சாஸ் -1டேபிள் ஸ்பூன்
வெங்காயம் -தேவையான அளவு
கேப்சிகம் -தேவையான அளவு
தக்காளி -தேவையான அளவு
ஆரிகானோ -தேவையான அளவு

pizza dosai

செய்முறை
தோசைக்கல்லை காய வைத்து ஊத்தப்பம் போல தோசையை ஊற்றிக் கொள்ள வேண்டும். லேசாக வெந்தவுடன் திருப்பிப் போட வேண்டும். இப்போது பீட்ஸா சாஸை தோசை மீது தடவிக் கொள்ளுங்கள். உடனடியாக வெங்காயம், கேப்சிகம் மற்றும் தக்காளி ஆகியவற்றை மாறி மாறி தோசை மீது பதிய வைக்க வேண்டும். இப்போது துருவிய சீஸை அதன் மீது தூவ வேண்டும். இதன் மீது ஆரிகானோ தூவி மூடி வைத்து அடுப்பை சிம்மில் வைத்து சீஸ் நன்றாக உருகும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். வெந்தவுடன் நான்கு பாகமாக கட் செய்து தக்காளி சாஸுடன் பரிமாற வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் தோசை இது. ஸ்நாக்ஸ் போல கொடுப்பதற்கு இது மிகவும் ஏற்றது.  பீட்ஸா சாப்பிட ஆசைப்படும் குழந்தைகளை, ஜங்க் புட் என்று நிராகரித்து வைத்திருப்போம். இனி கவலையில்லாமல் இப்படிச் செய்து தரலாம்.