வீட்டிலேயே செய்யலாம் தக்காளி கெட்ச் அப்

 

வீட்டிலேயே செய்யலாம்  தக்காளி கெட்ச் அப்

பெங்களூரூ தக்காளி            -1கிலோ
மிளகாய்தூள்                   -2டீஸ்பூன்
உப்பு                          -1டீஸ்பூன்
சர்க்கரை                      -1டீஸ்பூன்
வினிகர்                       -3டீஸ்பூன்
பூண்டு பொடி            -1/4டீஸ்பூன்
வெங்காயபொடி                -1டீஸ்பூன்

பெங்களூரூ தக்காளி            -1கிலோ
மிளகாய்தூள்                   -2டீஸ்பூன்
உப்பு                          -1டீஸ்பூன்
சர்க்கரை                      -1டீஸ்பூன்
வினிகர்                       -3டீஸ்பூன்
பூண்டு பொடி            -1/4டீஸ்பூன்
வெங்காயபொடி                -1டீஸ்பூன்

செய்முறை

tomato

நன்கு பழுத்த தக்காளிகளை இரண்டாக வெட்டி குக்கரில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள்  வேக விடவேண்டும். வேக வைக்கும் பொழுது அதிகம் நீர் சேர்க்க வேண்டாம். தக்காளி ஆறியவுடன் மிக்ஸியில்  கூழாக அரைத்து எடுக்க வேண்டும். தக்காளியை நன்றாக  மை போல அரைக்க வேண்டும். தோலோ விதைகளோ இருந்தால், சுத்தமான வெள்ளைத்துணியில் வடிகட்டி எடுக்கவேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், அடுப்பை சிம்மில் வைத்து தக்காளி கலவையை ஊற்றி நன்றாக கொதிக்கவிடவேண்டும். கொதிக்கும் போது மிளகாய்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதில் வெங்காயப் பொடி, பூண்டு பொடி சேர்க்க வேண்டும். இப்பொழுது சர்க்கரையை சேர்த்து இன்னும் 10நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இறுதியாக வினிகர் சேர்த்து ஆறவைத்து சுத்தமான ஈரம் இல்லாத பாட்டிலில் போட்டு தேவையான நேரத்தில் உபயோகிக்கலாம்.