வீட்டிலேயே செய்யலாம் கடலைப்பருப்பு அல்வா!

 

வீட்டிலேயே செய்யலாம் கடலைப்பருப்பு அல்வா!

தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு     -200கி
வெல்லம்                              -300கி
புழுங்கல் அரிசி       -1கப்
பால்   -ஒன்றரை கப்
தேங்காய்-1/2மூடி
சர்க்கரை-1/2கப்
ஏலக்காய்      -1சிட்டிகை
நெய்   -50கி

தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு     -200கி
வெல்லம்                              -300கி
புழுங்கல் அரிசி       -1கப்
பால்   -ஒன்றரை கப்
தேங்காய்-1/2மூடி
சர்க்கரை-1/2கப்
ஏலக்காய்      -1சிட்டிகை
நெய்   -50கி
முந்திரி-10

kadalaiparupu halwa

செய்முறை
புழுங்கல் அரிசியை நன்றாக இருமுறைகளுக்கு மேல் கழுவிக் கொள்ளுங்கள். பின் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரை மணி நேரம் அரிசி ஊறியதும், அதனுடன் தேங்காய் சேர்த்து நைசாக அரைத்துக்  கொள்ள வேண்டும். கடலைப் பருப்பை அளவான நீர் விட்டு வேக வைக்க வேண்டும். இப்போது அரைத்த அரிசி மாவுடன் பால் சேர்த்து, அடி கனமான பாத்திரத்தில் போட்டு, அடுப்பில் வைத்து நன்றாக கிளறி, ஓரளவு வெந்ததும் வேக வைத்திருக்கும் கடலைப் பருப்பையும் அதில் சேர்த்து கிளறி விட வேண்டும். பிறகு துருவிய வெல்லம், சர்க்கரை இரண்டையும் சேர்க்க வேண்டும். இடையிடையே நெய் விட்டுக் கிளறி இறுதியில் ஏலக்காய் தூள், ஃபுட் கலர் சேர்க்க வேண்டும். பளபளவென்ற பதம் வந்ததும் இறக்கி, முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கவும். வித்தியாசமான சுவையில் கடலைப்பருப்பு அல்வா தயார். சுவையாக இருக்கும்.