வீட்டிலேயே இருங்கள்..கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

 

வீட்டிலேயே இருங்கள்..கொரோனாவை  கட்டுப்படுத்த முடியும் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

கொரோனா  பரவுதல் நாளுக்கு நாள் அதிவேகமாக அதிகரித்து வருவதால், மக்களை வீட்டிலேயே இருக்கும் படி மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

கொரோனா  பரவுதல் நாளுக்கு நாள் அதிவேகமாக அதிகரித்து வருவதால், மக்களை வீட்டிலேயே இருக்கும் படி மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 450ஐ கடந்துள்ள நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கொரோனா பரவுதல் 4 மற்றும் 5 ஆம் வாரங்களில் கடுமையாக இருப்பது மற்ற மாநிலங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ttn

இந்நிலையில் மக்களை வீட்டிலேயே இருக்குமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் மக்கள் அதனை முறையாக பின்பற்ற வேண்டும். மக்கள் அவரவர் வீட்டில் இருந்தால் தான் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர முடியும். வீட்டை விட்டு வெளியே வந்து உங்களின் வாழ்க்கையையும், உங்களுக்கு நெருங்கியவர்களின் வாழ்க்கையையும் ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விடாதீர்கள். மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் மாநில அரசு வழங்கி வருகிறது.