வீட்டிலிருந்த பொருள்களை வீசியெறிந்து, கார் கண்ணாடிகளை உடைத்த நிர்மலா தேவி! முழு சந்திரமுகியாக மாறியதால் விபரீதம்!!

வீட்டிலிருந்த பொருள்களை வீசியெறிந்து, கார் கண்ணாடிகளை உடைத்த நிர்மலா தேவி! முழு சந்திரமுகியாக மாறியதால் விபரீதம்!!

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் சிக்கிய நிர்மலா தேவி, அருப்புக்கோட்டையில் தான் வசிக்கும் வீட்டிலிருந்த பொருள்களை வெளியே வீசியும், கார் கண்ணாடிகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் சிக்கிய நிர்மலா தேவி, அருப்புக்கோட்டையில் தான் வசிக்கும் வீட்டிலிருந்த பொருள்களை வெளியே வீசியும், கார் கண்ணாடிகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

things

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைதான தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி, ஜாமீனில் வெளியில் வந்தார். சில நாட்களுக்கு முன் தனக்கு சாமி வந்திருப்பதாக நீதிமன்ற வளாகத்திலும், தனக்கு பேய் பிடித்து விட்டதாக அருப்புக்கோட்டை தர்காவிலும் கூறியிருந்தார். இந்நிலையில், அருப்புக்கோட்டை – ஆத்திப்பட்டி காவியன் நகரில், தான் குடியிருக்கும் வீட்டிலிருந்‌த பொருட்களை எல்லாம் அவர் வீதியில் வீசி எறிந்துள்ளார்.

car

அக்கம்பக்கத்தினரின் கார் கண்ணாடிகளையும் உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் நிர்மலா தேவி வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். தகவலறிந்து சென்ற அருப்புக்கோட்டை தாலுகா போலீசார், நிர்மலாதேவியின் அண்ணன் மூலம் நிர்மலாதேவியை அழைத்தனர். ஆனால் நீண்ட நேரமாக அவர் கதவைத் திறக்கவில்லை. இதையடுத்து நிர்மலாதேவி வீட்டுக்கு பாதுகாப்பு போட்டுள்ள போலீசார், அவர் வெளியே வந்தால்தான் விசாரிக்க முடியுமென கூறினர்.