வீட்டிலிருந்தே வேலை செய்வதை ஊக்குவிக்கும் ரிலையன்ஸ் ஜியோ – ரூ.251 ரீசார்ஜ் பிளான் அறிமுகம்

 

வீட்டிலிருந்தே வேலை செய்வதை ஊக்குவிக்கும் ரிலையன்ஸ் ஜியோ – ரூ.251 ரீசார்ஜ் பிளான் அறிமுகம்

இந்தியாவில் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதை ஊக்குவிக்கும் விதமாக ரிலையன்ஸ் ஜியோ புதிய ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது.

டெல்லி: இந்தியாவில் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதை ஊக்குவிக்கும் விதமாக ரிலையன்ஸ் ஜியோ புதிய ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் இந்த வைரஸ் பரவலை தடுக்க ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இதனால் நாட்டிலுள்ள பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்கும்படி கூறியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பி.எஸ்.என்.எல் மற்றும் ஆக்ட் ஃபைபர்நெட் ஆகிய நிறுவனங்கள் ‘வொர்க் ஃபிரம் ஹோம்’ சலுகையை அறிவித்தன.

ttn

இந்நிலையில், தற்போது ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு வொர்க் ஃபிரம் ஹோம் சலுகையை அறிவித்துள்ளது. அதாவது ரூ.251 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 51 நாட்கள் ஆகும். இந்த சலுகையில் டேட்டா தவிர வாய்ஸ்கால், எஸ்.எம்.எஸ் போன்ற வேறு எந்த பலன்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை.