வீட்டிற்கு நேரடி மது விற்பனை கிடையாது: மகாராஷ்டிர அமைச்சர் பல்டி

 

வீட்டிற்கு நேரடி மது விற்பனை கிடையாது: மகாராஷ்டிர அமைச்சர் பல்டி

வீட்டிற்கே நேரடியாக மது விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை மகாராஷ்டிர அமைச்சர் கூறியுள்ளார்.

மும்பை: வீட்டிற்கே நேரடியாக மது விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை மகாராஷ்டிர அமைச்சர் கூறியுள்ளார்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் விபத்து அதிகமாக இருக்கிறது, எனவே அதனை தவிர்க்க ஆன்-லைனில் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்க மகாராஷ்டிர அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இதுகுறித்து பேசிய அம்மாநிலத்தின் காலால் வரித்துறை அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே, 

‘இருசக்கர, நான்கு சக்கர வாகனம் இயக்குபவர்கள் மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவதால் விபத்தில் சிக்குகிறார்கள். மதுவகைகள் வீட்டுக்கே வந்தால், குடித்துவிட்டு வாகனம் இயக்குவது குறையும். இதன்மூலம் விபத்துக்களைக் குறைக்கலாம். ஆன்லைனில் காய்கறிகள், மளிகைபொருட்களை ஆர்டர் செய்வதுபோல், மதுவகைகளையும் ஆர்டர் செய்து மக்கள் பெற முடியும். ஆனால், மதுவகைகளை ஆர்டர் செய்யும் மக்களுக்குக் கண்டிப்பாக ஆதார் கார்டு இருக்க வேண்டும் என கூறியிருந்தார். அமைச்சரின் இந்த பேச்சு விவாதத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், வீடுகளுக்கு ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யும் எந்த திட்டமும் இல்லை என கூறி தனது முந்தைய கருத்தில் இருந்து அமைச்சர் பவான்குலே பல்டி அடித்துள்ளார்.