வீட்டின் மேல் பறந்த ட்ரோன் கேமரா… டென்ஷனான அரசியல் தலைவர் | திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறாரா?!

வீட்டின் மேல் பறந்த ட்ரோன் கேமரா… டென்ஷனான அரசியல் தலைவர் | திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறாரா?!

தமிழகத்தில் வலிமையான அரசியல் தலைவர்கள் இல்லாத நிலையில், ஆந்திர அரசியலில் தினந்தோறும் சர்ச்சைகளும், பூகம்பங்களும் வெடித்து வருகிறது. சமீபத்தில் பெய்த கன மழையினால் ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை முன்னிட்டு, வெள்ள சேதத்தைக் கணக்கிடுவதற்காக ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வீட்டின் மேலே ட்ரோன் கேமரா பறக்கவிடப்பட்டது அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் இந்த செயலுக்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.ஏற்கெனவே விமான நிலையத்தில் பிற பயணிகளைப் போலவே சந்திரபாபு நாயுடுவும் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு, பயணிகளின் பேருந்தில் பயணிக்க வைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பிய நிலையில், திட்டமிட்டே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சந்திரபாபுவை பழிவாங்குவதாக தெலுக்கு தேசம் கட்சியினர் கொந்தளித்தனர்.
இது தொடர்பாக தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நரா லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இசட் பிரிவு பாதுகாப்பில் இருக்கும் ஓர் அரசியல் தலைவரின் வீட்டின் மேல் ட்ரோன் கேமரா பறக்க விட்டு பதிவு செய்ய உத்தரவிட்டது யார்?” என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சந்திரபாபு நாயுடுவோ இது தொடர்பாக இன்னும் ஒரு படி மேலேறி, ஆந்திர டிஜிபியிடம் இது குறித்து புகார் கொடுத்துள்ளார். ட்ரோன் கேமராவை இயக்கியவர்கள் யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென்றும் சந்திரபாபு நாயுடு கோரியுள்ளார்.
சமூக வலைதளங்களில், கடந்த இரண்டு நாட்களாக கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள சந்திரபாபுவின் வீடு என்ற தலைப்பில் வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. இந்த வீட்டில்தான் கடந்த 2016 முதல் சந்திரபாபு நாயுடு வசித்துவருகிறார்.

முன்னாள் முதல்வரின் வீட்டினை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ரகசியமாக ஆராய்ந்ததாக தெலுங்கு தேச கட்சி குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் அனில் குமார் இது குறித்து அளித்துள்ள விளக்கத்தில், “வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காகவே ட்ரோன் கேமரா பயன்படுத்தப்பட்டது. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சந்திரபாபு நாயுடுவின் வீடும் இருந்ததாலேயே அந்தப் புகைப்படம் வெளியாகியுள்ளது. வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்கு எங்கெல்லாம் வெள்ளம் சூழ்ந்துள்ளதோ அங்கெல்லாம் பதிவு செய்வதற்கு முழு அதிகாரம் உள்ளது. இது குறித்து யாருடைய உத்தரவும் தேவையில்லை”  என்று காட்டமாகவே பதிலளித்துள்ளார்.