வீடு தேடி கொடுக்க கஷ்டமா இருந்துச்சு! – 24 ஆயிரம் கடிதங்களை வீட்டில் பதுக்கிய போஸ்ட் மேன்

 

வீடு தேடி கொடுக்க கஷ்டமா இருந்துச்சு! – 24 ஆயிரம் கடிதங்களை வீட்டில் பதுக்கிய போஸ்ட் மேன்

வீடு தேடி டெலிவரி செய்ய கஷ்டமாக இருந்தது என்று கூறி 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை தன்னுடைய வீட்டில் பதுக்கிய தபால்காரரை டோக்கியோ போலீசார் கைது செய்துள்ளனர்.
டோக்கியோவில் குறிப்பிட்ட தபால் நிலையத்துக்கட்ட பகுதிக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் மட்டும் சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்று சேரவில்லை என்று பொது மக்கள் தொடர்ந்து புகார் கூறிவந்தனர்.

வீடு தேடி டெலிவரி செய்ய கஷ்டமாக இருந்தது என்று கூறி 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை தன்னுடைய வீட்டில் பதுக்கிய தபால்காரரை டோக்கியோ போலீசார் கைது செய்துள்ளனர்.
டோக்கியோவில் குறிப்பிட்ட தபால் நிலையத்துக்கட்ட பகுதிக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் மட்டும் சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்று சேரவில்லை என்று பொது மக்கள் தொடர்ந்து புகார் கூறிவந்தனர். ஆனால், தொடக்கத்தில் அதை டோக்கியோ தபால் துறையினர் பெரிதாக எடுக்கவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் கூறியதைத் தொடர்ந்து இது தொடர்பாக தபால் துறையினர் விசாரணையில் இறங்கினர்.

japan

அப்போது டெலிவரி செய்யப்படவில்லை என்று வந்த புகார்கள் அனைத்தும் சமீபத்தில் ஓய்வு பெற்ற தபால் காரரிடம் வழங்கப்பட்டிருந்தது என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் “அட்ரஸ் தேடிப்பிடித்து டெலிவரி செய்வதில் எனக்கு சிரமமாக இருந்தது. இதனால், அப்படிப்பட்ட கடிதங்களை எல்லாம் என்னுடைய வீட்டில் பத்திரமாக வைத்துவிடுவேன்” என்று கூறியுள்ளார். அவர் வீட்டில் சோதனையிட்டபோது 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.

letter

2003ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு ஓய்வு பெறும் வரையிலா காலகட்டத்தைச் சேர்ந்த கடிதங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதற்காக டோக்கியோ தபால் துறை பொது மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. மேலும், தபலை உரியவர்களிடம் அளிக்காமல் பதுக்கிய தபால்காரருக்கு மூன்று ஆண்டு சிறை அல்லது 5 லட்சம் யென் (4,600 டாலர்) அபராதம் விதிக்கப்படும் என்று செய்திகள் கூறுகின்றன.