வீடு கட்ட கடன் தருகிறோம் என்று கூறி பல லட்சம் கொள்ளையடித்த பெண்! நீலகிரியில் பரபரப்பு

 

வீடு கட்ட கடன் தருகிறோம் என்று கூறி பல லட்சம் கொள்ளையடித்த பெண்! நீலகிரியில் பரபரப்பு

அறக்கட்டளை மூலம் வீடு கட்ட கடன் தருகிறோம் என்று கூறி பல லட்சம் சுருட்டிய பெண்ணை நீலகிரி போலீசார் கைது செய்துள்ளனர்.

அறக்கட்டளை மூலம் வீடு கட்ட கடன் தருகிறோம் என்று கூறி பல லட்சம் சுருட்டிய பெண்ணை நீலகிரி போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலகிரியில் வீடுகட்ட அறக்கட்டளை மூலம் 20 லட்ச ரூபாய் வரை கடன் கொடுக்கிறோம், ஆனால், அதற்கு முன்பணமாக ரூ.85,000 செலுத்த வேண்டும் என்று ஒரு தொண்டு நிறுவனம் கூறியுள்ளது. மிகக் குறைந்த வட்டி என்பதால் பலரும் ரூ.85,000 கட்டி வீடு கட்ட பணம் கிடைக்கும் என்று காத்திருந்தனர். ஆனால், திடீரென்று அந்த அறக்கட்டளை அலுவலகம் காலி செய்யப்பட்டுவிட்டது. தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த மக்கள் போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர்.

ttn

இதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து அறக்கட்டளை நிர்வாகிகளை போலீசார் தேடி வந்தனர். பொது மக்கள் கூறிய தகவல், விசாரணையில் கிடைத்த தகவல் அடிப்படையில் பொள்ளாச்சி வடக்குபாளையம் பகுதியில் பதுங்கியிருந்த ரூபினி பிரியா (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து நீலகிரி போலீசார் கூறுகையில், “பொது மக்கள் அளித்த புகார் அடிப்படையில் போலி அறக்கட்டளை நடத்திய பெண்ணை தேடி வந்தோம். அவர் பொள்ளாச்சியில் இருக்கும் தகவல் அறிந்து அங்கு சென்றோம். மிகவும் வசதியான குடும்ப பெண் போல இருந்தார். விசாரித்ததில் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறினார். 
ரூபினி பிரியா தனியாக இதை செய்யவில்லை. சிவா, கார்த்திக் மற்றும் வெங்கடேஷ் என்று பலரை துணைக்கு சேர்த்து அவர்கள் மூலம் ஏஜெண்ட்டை நியமிப்பார். வீடுகட்ட கடன் உதவி செய்யப்படுகிறது.

tttn

ஏழைகளுக்கு வங்கியை விட குறைந்த வட்டியில் பணம் தரப்படுகிறது. முன்பணமாக 85 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டும் என்று கூறி ஊட்டியில் மட்டும் 65 பேரிடம் சுமார் ரூ.18 லட்சம் ஏமாற்றியுள்ளனர்.
ஊட்டி மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளில் இவர்கள் இதுபோன்று போலி அறக்கட்டளை நடத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதில் சிவா வேறு ஒரு வழக்கில் தற்போது சிறையில்தான் உள்ளார். கார்த்திக், வெங்கடேஷ் உள்ளிட்டவர்களை தேடி வருகிறோம்” என்றனர்.
ரூபினி பிரியா சிக்கிய தகவல் அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி அலுவலகத்தில் திரண்டு, தங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றுத் தரும்படி கோரிக்கை விடுத்தனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.