வீடு இடிந்து நிர்கதியாக நின்ற பாட்டிக்கு ராகவா லாரன்ஸ் செய்த பெரும்உதவி: குவியும் பாராட்டு!

 

வீடு இடிந்து நிர்கதியாக நின்ற பாட்டிக்கு ராகவா லாரன்ஸ் செய்த பெரும்உதவி: குவியும் பாராட்டு!

கஜா புயலினால் தனது வீட்டை இழந்து நிர்கதியாக நின்ற செல்லகுஞ்சி என்ற பாட்டிக்கு தன் சொந்தச் செலவில் புதிய வீட்டைக் கட்டிக் கொடுத்து நெகிழ வைத்துள்ளார்  நடிகர் ராகவா லாரன்ஸ். 

தஞ்சாவூர்: கஜா புயலினால் தனது வீட்டை இழந்து நிர்கதியாக நின்ற செல்லகுஞ்சி என்ற பாட்டிக்கு தன் சொந்தச் செலவில் புதிய வீட்டைக் கட்டிக் கொடுத்து நெகிழ வைத்துள்ளார்  நடிகர் ராகவா லாரன்ஸ். 

gaja

சோறுடைத்த சோழ நாடு எனப் பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் கஜா புயலின் பாதிப்பினால்  சில காலம் சோறில்லாமல் தவித்தது. கடந்த நவ.15ம் தேதி கோரத் தாண்டவம் ஆடிய கஜா புயலினால் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளானர். பல்வேறு குடும்பங்கள்  தங்கள்  வீடுகள்  மற்றும் உடைமைகளை இழந்து தவித்தனர். 

chella kunji

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நபர்களும், தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்டின. அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பதாக அறிவித்தார். அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கரிசைக்காடு கிராமத்தில் வாழ்ந்து வந்த செல்லகுஞ்சி என்ற பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார் லாரன்ஸ்.   

 

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள லாரன்ஸ், இந்த படத்தைப் பகிர்வதில் மகிழ்ச்சி. கஜா புயலினால் பாதிக்கப்பட்ட இந்த அம்மாவுக்கு உதவி செய்யப் பலரும் என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். இன்று வீடு கட்டும் பணி  முடிவடைந்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இந்த சம்பவத்தை என் கவனத்திற்குக் கொண்டு வந்தவர்களுக்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார். லாரன்ஸின் இந்த உதவியைக் கண்டு அவரது ரசிகர்கள் மட்டுமில்லாது பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ganesan

முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வசிக்கும்  சமூக சேவகர் ‘515 கணேசன்’ வீடு சேதமடைந்த நிலையில் அவருக்கு ராகவா லாரன்ஸ், தன் சொந்தச் செலவில் புதிய வீட்டைக் கட்டிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.