வீடுகளை காலி செய்ய சொன்னால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை: தமிழக அரசு

 

வீடுகளை காலி செய்ய சொன்னால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை: தமிழக அரசு

குறிப்பாக  வீட்டு வாடகை, இ.எம்.ஐ உள்ளிட்ட உள்ளிட்ட மாத செலவுகளை குறைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலில் ஏப்ரல் 14 வரை இருந்த ஊரடங்கு, மீண்டும் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வேலைகளுக்கு செல்ல முடியாமல், வருமானமின்றி தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு உதவ தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.குறிப்பாக  வீட்டு வாடகை, இ.எம்.ஐ உள்ளிட்ட உள்ளிட்ட மாத செலவுகளை குறைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ttn

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை வீடு காலி செய்யுமாறு புகார்கள் வருவதால், அந்த வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வீடுகளை காலி செய்ய சொல்வது தடுப்பு பணியில் ஈடுபடுவோரை பணி செய்ய விடாமல் தடுப்பதால், அத்தகைய புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. 
.