வீடுகளில் விளக்கேற்றுகிறோம்… வேண்டுகோளுக்கு செவி மடுப்பீர்களா மோடி? – ப.சிதம்பரம் கேள்வி

வீடுகளில் விளக்கேற்றுகிறோம்… வேண்டுகோளுக்கு செவி மடுப்பீர்களா மோடி? – ப.சிதம்பரம் கேள்வி

மோடி இன்று காலை 9 மணிக்கு வீடியோ ஒன்றை வெளியிடப்போகிறார் என்று அறிவித்ததுமே, பல்வேறு நிதி உதவித் திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்று ப.சிதம்பரம் கூறியிருந்தார். ஆனால், அனைவரின் எதிர்பார்ப்புக்கும் மாறாக, வீடுகளில் விளக்கேற்றுவோம் என்று மோடி தெரிவித்துள்ளார். 
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

மோடியின் அறிவுரையை ஏற்று விளக்கேற்றுவோம்… அதே நேரத்தில் எங்கள் கோரிக்கைக்கு செவி மடுப்பீர்களா மோடி? – என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடி இன்று காலை 9 மணிக்கு வீடியோ ஒன்றை வெளியிடப்போகிறார் என்று அறிவித்ததுமே, பல்வேறு நிதி உதவித் திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்று ப.சிதம்பரம் கூறியிருந்தார். ஆனால், அனைவரின் எதிர்பார்ப்புக்கும் மாறாக, வீடுகளில் விளக்கேற்றுவோம் என்று மோடி தெரிவித்துள்ளார். 
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

modi-speech

அதில், “அன்புள்ள பிரதமர் மோடி அவர்களுக்கு, தங்கள் அறிவுரையை ஏற்று 5-4-2020 அன்று எங்கள் வீடுகளில் விளக்கேற்றுவோம். மாற்றாக, எங்கள் வேண்டுகோள்களுக்குத் தாங்கள் செவி மடுப்பீர்களா?

ஏழை, எளிய மக்களுக்கு, குறிப்பாக நிதியமைச்சர் அறவே மறந்து விட்ட பிரிவினருக்கு, ஒரு தாராளமான வாழ்வாதாரத் திட்டத்தைத் தாங்கள் அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம்.

பொருளாதாரச் சரிவைத் தடுத்து, குலைந்து விட்ட பொருளாதாரத்தை உயிர்ப்பிக்க நடவடிக்கைகளை அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம். ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஆறுதலும் நம்பிக்கையும் தரும் எந்த அறிவிப்பும் வரவில்லையே?” என்று கூறியுள்ளார்.