வி.ஜி.சித்தார்த்தா தற்கொலை: கஃபே காஃபி டே நிறுவனத்தின் இடைக்கால தலைவர் நியமனம்!

 

வி.ஜி.சித்தார்த்தா தற்கொலை: கஃபே காஃபி டே நிறுவனத்தின் இடைக்கால தலைவர் நியமனம்!

தொழில் நெருக்கடி  காரணமாக கஃபே காபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்ட நிலையில்  இடைக்கால தலைவராக எஸ்.வி.ரங்கநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

வி.ஜி.சித்தார்த்தா தற்கொலை: கஃபே காஃபி டே நிறுவனத்தின் இடைக்கால தலைவர் நியமனம்!

கர்நாடகா:  தொழில் நெருக்கடி  காரணமாக கஃபே காபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்ட நிலையில்  இடைக்கால தலைவராக எஸ்.வி.ரங்கநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர்  எஸ்.எம்.கிருஷ்ணா. இவரது மருமகன் வி.ஜி.சித்தார்த்தா. இவர் இந்தியா முழுவதும் கிளைகள் கொண்டுள்ள கஃபே காபி டே உட்பட சில நிறுவனங்களை நடத்தி வந்தார்.  வி.ஜி.சித்தார்த்தா மங்களூரில் உள்ள நேத்ராவதி நேற்று முன்தினம் இரவு குதித்து தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து நேத்ராவதி  ஆற்றில்  சித்தார்த்தாவின் உடலை தேடும் பணியில் இன்று காலை  அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. 

முன்னதாக வி.ஜி.சித்தார்த்தா கஃபே காபி டே நிர்வாகத்திற்கு  எழுதிய கடிதத்தில், பங்குகள் தொடர்பான விவகாரத்தால் நமது நிறுவனத்தின் தொழில் சார்ந்த பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை நிறுத்தி வைத்தது. இதனால் எனக்கு நெருக்கடி ஏற்பட்டது. மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை. நான் ஒரு தோல்வியடைந்த தொழிலதிபர்’ என்று கூறியிருந்தார். இதன் மூலம் இந்தியாவின்  கஃபே கிங்காக இருந்த  வி.ஜி.சித்தார்த்தா  தொழிலில் ஏற்பட்ட  நஷ்டம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. 

இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான  காபி டே நிறுவனத்தின் தலைவர் தொழில் நெருக்கடி  காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதன்  பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது.  இதனால் தொழில் ரீதியாக நெருக்கடி அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் சரிசெய்யும் நோக்கில் தற்காலிக தலைவராக எஸ்.வி.ரங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் இயக்குநர்  வாரியர் கூட்டம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.