வி.ஐ.பி தொகுதி -7 : பாரிவேந்தர் என்கிற பச்சை முத்துக்குத்தான் பெரம்பலூர் பச்சைக்கொடி காட்டும் என்று சொல்கிறது கள நிலவரம்!

 

வி.ஐ.பி தொகுதி -7 : பாரிவேந்தர் என்கிற பச்சை முத்துக்குத்தான் பெரம்பலூர் பச்சைக்கொடி காட்டும் என்று சொல்கிறது கள நிலவரம்!

பாரிவேந்தர் என்கிற பச்சை முத்துக்குத்தான் பெரம்பலூர் பச்சைக்கொடி காட்டும் என்று சொல்கிறது கள நிலவரம்!

பாரிவேந்தர் என்கிற பச்சை முத்துக்குத்தான் பெரம்பலூர் பச்சைக்கொடி காட்டும் என்று சொல்கிறது கள நிலவரம்!

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு பெரிய பாரம்பரியம் இருக்கிறது.தனி மாவட்டமாவதற்கு முன் திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாய் இருந்தது பெரம்பலூர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பழனியாண்டி,தமிழகத்தின் ஆகச்சிறந்த பார்லிமெண்டேரியன்களில் ஒருவரும்,எமர்ஜென்சி கதாநாயகருமான இரா.செழியன்,திமுகவின் அ.ராசா ( 1999,2004 ,இரண்டுமுறை) நடிகர் நெப்போலியன் ஆகியோரை டெல்லிக்கு அனுப்பி அழகுபார்த்த தொகுதி இது.

பர்லி

குளித்தலை,லால்குடி,மணச்சநல்லூர், முசிறி,துறையூர்,பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டது பெரம்பலூர் மக்களவைத்தொகுதி.கடந்த தேர்தலில் பி.ஜே.பி அணியில் போட்டியிட்ட எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களை உருவாக்கிய பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர், இம்முறை தி.மு.க அணியில் களம் காண்கிறார்.

அ.தி.மு.க வேட்பாளர் முன்னாள் அமைச்சர் என்.ஆர் சிவபதி.தொட்டியத்தை அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிவபதி இரண்டுமுறை தமிழக சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்தவர்.பள்ளிக்கல்வி மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த அனுபவமுள்ளவர்.

கடந்த தேர்தலில் தனித்தே 2 லட்சம் ஓட்டுகளுக்கு மேல் வாங்கிய பாரிவேந்தர், இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் அவரது ஐ.ஜே.கே தொண்டர்கள் ஓவர் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.எந்த அளவுக்கு உற்சாகமென்றால் எலக்‌ஷன் கமிஷனின் கண்களை உருத்துமளவுக்கு!

dmk

எங்கே போனாலும் கார்களின் ஊர்வலம்தான்.இந்தத் தொகுதியில் தி.மு.க-வின் வாக்கு வங்கியுடன் பாரிவேந்தரின் உடையார்,மற்றும் மூப்பனார் இன உறவுகள் அதிகமிருப்பதால் உதயசூரியன் பெரம்பலூரை வென்று விடும் என்பதுதான் தற்போதைய கள நிலவரம்.

அ.தி.மு.க-வின் என்.ஆர் சிவபதி,குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ஆர்.டி ராமச்சந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ இரா.தமிழ்செல்வன், பா.ம.க மாவட்டச் செயலாளர் செந்தில் குமார், என்று அணி திரட்டிக்கொண்டு இருக்கிறார்.சிவபதியும் பச்சைமுத்துக்கு சரியான  டஃப் கொடுப்பார் என்றாலும், இப்போதைக்கு பாரி வேந்தர் என்கிற பச்சை முத்துக்குத்தான் பெரம்பலூர் பச்சைக்கொடி காட்டும் என்று சொல்கிறது கள நிலவரம்!