வி.ஐ.பி தொகுதி – 3 காங்கிரஸ் செல்வாக்கு அதிகமுள்ள தென்காசி தொகுதி! டஃப் கொடுக்கும் வேட்பாளர்கள்! காட்சியை மாற்றப்போவது யார்!?

 

வி.ஐ.பி தொகுதி – 3  காங்கிரஸ் செல்வாக்கு அதிகமுள்ள தென்காசி தொகுதி! டஃப் கொடுக்கும் வேட்பாளர்கள்! காட்சியை மாற்றப்போவது யார்!?

தென்காசி தி.மு.க-வுக்கு ராசி இல்லாத தொகுதி.இதுவரை தென்காசித் தொகுதியில் தி.மு.க வென்றதே இல்லை.1957-ல் ஆரம்பித்து இந்த தொகுதியில் காங்கிரஸ் ஒன்பது முறை வென்றிருக்கிறது.

தென்காசி : தென்காசி தி.மு.க-வுக்கு ராசி இல்லாத தொகுதி.இதுவரை தென்காசித் தொகுதியில் தி.மு.க வென்றதே இல்லை.1957-ல் ஆரம்பித்து இந்த தொகுதியில் காங்கிரஸ் ஒன்பது முறை வென்றிருக்கிறது.அதில் எம்.அருணாச்சலம் மட்டுமே ஆறுமுறை வென்றிருக்கிறார்.அதில் 96-ல் ஒருமுறை த.மா.கா சார்பில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்.இரண்டு முறை அ.தி.மு.க-வும்,இரண்டு முறை சி.பி.ஐ-யும் இந்த தொகுதியில் வென்றிருக்கின்றன.

கடந்த தேர்தலில் வென்ற வசந்தி முருகேசனுக்கு மறுபடியும் வாய்ப்பு கொடுக்காமல்,டாக்டர் கிருஷ்ணசாமிக்கு இந்தத் தொகுதியை தாரை வார்த்திருக்கிறது அ.தி.மு.க கூட்டணி!

krishanasamy ttn

1991-ல் சதன் திருமலைக்குமாரை நிறுத்தியதற்குப் பிறகு இதுவரை தி.மு.க இங்கு போட்டியிடவே இல்லை.இந்த முறை தி.மு.க இங்கே தனுஷ் எம் குமார் என்பவரை வேட்பாளராக அறிவித்திருக்கிறது.ஒரு வகையில் இவரும் ஒரு அரசியல் வாரிசுதான்.இவரது தந்தை தனுஷ்கோடி எம்.ஜி.ஆர் காலத்தில் ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தவர்.கே.கே.எஸ்.எஸ் ஆரின் நெருங்கிய நண்பர்.கே.கே.எஸ்.எஸ் ஆர் அ.தி.மு.க-வை விட்டு விலகி, தி.மு.கவுக்கு வந்தபோது தனுஷ்கோடியும் தி.மு.க-வுக்கு வந்துவிட்டார்.

danush m kumar dmk

இப்போது தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தனுஷ்கோடியின் வாரிசைத்தான் களம்  இறங்கியிருக்கிறது தி.மு.க.ராஜபாளையத்தை அடுத்த சேத்தூர்காரரான இவர், பி.இ அக்ரி,எம்.பி.ஏ,எல்.எல்.பி என ஏகப்பட்ட பட்டங்கள் வாங்கியிருக்கிறார்.
டாக்டர்.கிருஷ்ணசாமியும் இந்தத்  தொகுதிக்கு புதியவர்தான்.இவர்கள் இருவருக்கும் போட்டியாக அ.ம.மு.க சார்பில்,ஏ.எஸ் பொன்னுத்தாயி என்பவரை களமிறக்குகிறார் டி.டி.வி.தினகரன்.

32 வயதான பொன்னுத்தாயி இதற்குமுன் 2011- 2016 காலகட்டத்தில் ராஜபாளையம் யூனியன் சேர்மனாக இருந்தவர்.ராஜபாளையத்தில் ஜவுளிக்கடை வைத்திருக்கிறார்.மனோன்மணியம் பல்கலையில் தொலைதூர கல்வித்திட்டத்தில் எம்.ஏ படித்திருக்கிறார்.தவிர,டாக்டர் கிருஷ்ண சாமிக்கு இணையாக பொன்னுத்தாயும் டெரர் பர்சனாலிட்டிதான்.

gopalasamy ttn

ராஜபாளையம் யூனியன் சேர்மனாக இருந்தபோது ராஜபாளையம் எம்.எல்.ஏ கே.கோபால்சாமியுடன் நேருக்கு நேராக மோதியவர்.அந்த மோதலில் இவரது தந்தை அழகாபுரியான் உட்பட பலருக்கு கத்திக்குத்து விழுந்ததெல்லாம் மறக்க முடியாத ரத்த சரித்திரம்!

2015-ல் சில ஒப்பந்தங்கள் காரணமாக,அவரது தந்தை அழகாபுரியானுடன் பொன்னுத்தாயி மோதிய சம்பவமும் உண்டு.அந்த சமயத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் வாங்கி வைக்கப்பட்டு இருந்த 46,500 முட்டைகள் குடோனில் இருந்து மாயமாக மறைந்துவிட்டன.அப்பாவும் மகளும் மாறிமாறி முட்டை திருடியதாகக் குற்றம் சாட்டி போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள்

 

அ.தி.மு.க-வில் இருந்து வந்தவரின் வாரிசுக்கு எம்.பி சீட்டா என்று உ.பிக்கள் குமுறும் சப்தம் ஒரு பக்கம் கேட்கிறது.’அய்யோ பொன்னுதாயா!?’ என்று அ.ம.மு.க தொண்டர்கள் அலறும் சப்தம் ஒரு பக்கம் என்று தொகுதி முழுக்க எதிரொலிக்கிறது!பட்டியில் இனத்தைவிட்டு வெளியேருவேன் என்று சொல்லிவிட்டு, டாக்டர்.கிருஷ்ணசாமி எப்படி தனித்தொகுதியில் நிக்கலாம் என்ற கேள்வி,தென்காசி தொகுதி தாண்டி தமிழகமெங்கும் கேட்கிறது!

இந்த தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் மூவருமே தேவேந்திர குல வேளாளர்கள்தான் என்பதால், இங்கே தேர்தல் முடிவை சாதிகளைவிட மற்றகாரணிகள்தான் தீர்மானிக்கும்! இப்போதுதானே தேர்தல் களைகட்ட ஆரம்பித்திருக்கிறது.பிரச்சாரம் சூடு பிடிக்கும்போது புதுபுது திருப்பங்களை எதிர்பார்க்கலாம்!