விஸ்வாசம் வெற்றியை வித்தியாசமாகக் கொண்டாடிய அஜித் ரசிகர்கள்!! 

 

விஸ்வாசம் வெற்றியை வித்தியாசமாகக் கொண்டாடிய அஜித் ரசிகர்கள்!! 

விஸ்வாசம் படம் வெற்றியை அஜித் ரசிகர்கள் மரக்கன்றுகள் வழங்கி வித்தியாசமான முறையில் கொண்டாடிவருகின்றனர்

வேலூர்: விஸ்வாசம் படம் வெற்றியை அஜித் ரசிகர்கள் மரக்கன்றுகள் வழங்கி வித்தியாசமான முறையில் கொண்டாடிவருகின்றனர். 

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் கடந்த 10-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தல ரசிகர்கள், அவருக்கு பேனர்கள் வைத்து அமர்க்களப்படுத்தி வந்தனர்.தல ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் திரைப்படம் ரசிக்க வைப்பதாகக் கூறப்படுகிறது. 

viswasam

குடும்ப படமான ‘விஸ்வாசம்’திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளம் உள்ளது. பார்வையாளர்களை கண் கலங்க வைக்கும் செண்டிமெண்ட் காட்சி அமைந்துதிருப்பதால் குடும்பமாக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

viswasam

இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் வெற்றியை சிறப்பிக்கும் விதமாக வேலூர் மாவட்டத்தில் அஜித் ரசிகர்கள் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி சமூக விழிப்புணர்வை உருவாக்கியுள்ளனர்.அந்த பகுதியில் உள்ள பல வீடுகளுக்கு சென்று அஜித் ரசிகர்கள் மரக் கன்றுகளை வழங்கி விஸ்வாசம் படத்தின் வெற்றியைக் பெரும்விதமாக கொண்டாடி வருகின்றனர். 

plant