விஸ்வாசம் விமர்சனம்: எதிர்பார்ப்போடு வராதீங்கப்பா; பொது மக்கள்  கருத்து – வீடியோ!

 

விஸ்வாசம் விமர்சனம்: எதிர்பார்ப்போடு வராதீங்கப்பா; பொது மக்கள்  கருத்து – வீடியோ!

‘தல’ அஜித் நடித்துள்ள விஸ்வாசம்  படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 

சென்னை: ‘தல’ அஜித் நடித்துள்ள விஸ்வாசம்  படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 

இயக்குநர்  சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம்.  வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ வரிசையில் 4வது முறையாக இயக்குநர் சிவாவுடன் நடிகர் அஜித் கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

 

இப்படத்தின் முதல்பாதியில் குடும்பம், செண்டிமெண்ட், காமெடியாகவும், இரண்டாம் பாகம் சண்டை காட்சிகள் என அதிரடியாகவும் உள்ளது. இந்நிலையில் விஸ்வாசம் படம் குறித்த பொது மக்களின் கருத்துக்களை காணலாம்!