விஸ்வாசம் மேக்கிங்கில் என்ஜாய் பண்ணும் தல: ரசிகர்கள் உற்சாகம்!

 

விஸ்வாசம் மேக்கிங்கில் என்ஜாய் பண்ணும் தல: ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான  விஸ்வாசம் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் வெளியான  விஸ்வாசம் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் சிவா -அஜித் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அஜித்துக்கு அவருக்கு மகளாக அனிகாவும் இவர்களுடன் தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான இப்படம் அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்தது. காதல், செண்டிமெண்ட், சண்டை, காமெடி என உருவாகியிருந்த இப்படம், வசூல் சாதனை படைத்தது. குறிப்பாக அஜித்தின் மற்ற படங்களை காட்டிலும் இந்த இப்படம் அதிக வசூலை பெற்றிருந்தாக சினிமா விமர்சகர்கள் கருத்து  தெரிவித்திருந்தனர்.

 

இந்தநிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேக்கிங் வீடியோவில் நடிகர் அஜித் இடம்பெற்றிருக்கும் காட்சிகளை பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.