‘விஸ்வாசம்’ பொங்கலுக்கு இல்லையா? தல ரசிகர்கள் அதிர்ச்சி!

 

‘விஸ்வாசம்’ பொங்கலுக்கு இல்லையா? தல ரசிகர்கள் அதிர்ச்சி!

தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து பின் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து பின் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 4வது முறையாக இயக்குநர் சிறுத்தை சிவா, அஜித் கூட்டணியில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் உருவாகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என்று போஸ்டர் வெளியிட்டு படக்குழு உறுதிப்படுத்தியது. இதனிடையே, பொங்கல் பண்டிகைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் ரிலீசாகும் என்று அறிவிப்பு வெளியானது. இரு பெரும் நட்சத்திரங்களில் திரைப்படம் ஒரே வேளையில் வெளியானால் திரையரங்குகள் கிடைக்காமல், வசூல் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், ‘பேட்ட’ ரிலீசால் ‘விஸ்வாசம்’ படத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விஸ்வாசம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று ‘விஸ்வாசம்’ பட தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

தற்போது பொங்கல் பண்டிகைக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ‘பேட்ட’ திரைப்படம் ரிலீசாவதால் ‘விஸ்வாசம்’ திரைப்படம் குடியரசு தின விடுமுறைக்கு வெளியாகும் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், அஜித் ரசிகர்கள் இது தல பொங்கல் தான் என உறுதியாக உள்ளனர்.