‘விஸ்வாசம்’ படம் 50-வது நாளில் ஆன்லைனில் வெளியாகிறது! ‘தல’ ரசிகர்கள் அதிர்ச்சி?

 

‘விஸ்வாசம்’ படம் 50-வது நாளில் ஆன்லைனில் வெளியாகிறது! ‘தல’ ரசிகர்கள் அதிர்ச்சி?

தல அஜித் நடித்து கடந்த மாதம் 10-ம் தேதி வெளிவந்த படம் ‘விஸ்வாசம்’.விரைவில் 50-வது நாளை நெருங்க விருக்கிறது. ரசிகர்கள் பிரமாண்டமான விழா எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள்.அதே நாளில் ஆன்லைனில் படம் வெளிவரப்போகிறது என்ற செய்தியால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்

தல அஜித் நடித்து கடந்த மாதம் 10-ம் தேதி வெளிவந்த படம் ‘விஸ்வாசம்’.விரைவில் 50-வது நாளை நெருங்க விருக்கிறது. ரசிகர்கள் பிரமாண்டமான விழா எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள்.அதே நாளில் ஆன்லைனில் படம் வெளிவரப்போகிறது என்ற செய்தியால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த  சூப்பர் ஸ்டார் நடித்த ‘பேட்ட’ படத்தைவிட ‘விஸ்வாசம்’ அதிக வசூல் செய்திருக்கிற தகவலை தியேட்டர் உரிமையாளர் ஒருவர் பகிரங்கமாகவே சினிமா விழா ஒன்றில் சொன்னார்.

viswasam

இப்போதுவரை நூற்றுக்கும் அதிகமான தியேட்டர்களில்  ‘விஸ்வாசம்’ ஓடிக்கொண்டிருக்கிறது.விரைவில் ஐம்பதாவது நாளை எட்டவிருக்கும் நிலையில் ‘தல’ரசிகர்கள்,பெரிய அளவில் விழா எடுத்து கொண்டாடும் மனநிலையில் இருக்கிறார்கள். காரணம்,இதுவரை அஜித் நடித்த படங்களில் அதிகம் வசூலான படம் இதுதான்.

ஆனால், அவர்களின் எண்ணத்தில் மண் அள்ளிப்போட்டிருக்கிறது அமேசான் பிரைம் வீடியோ! தனது இணையதளத்தில் அன்று  ‘விஸ்வாசம்’ படம் வெளியாகப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ்ராக்கர்ஸ் மாதிரி இது அல்ல! உரிய விலை கொடுத்து வாங்கியவர்கள்தான். 

viswasam

சின்ன பட்ஜெட் படங்கள் என்றால்,இரண்டாவது வாரத்தில் வெளியிடுவார்கள்.ஸ்டார் நடிகர்கள் படங்கள் என்றால் 50-வது நாள்.என்பது வியாபார கணக்கு.’விவேகம்’ மாதிரி ஆகிடுமோ என்ற பயத்தில் முன்கூட்டியே தயாரிப்பாளர் தரப்பு விற்றிருப்பார்கள்.

இப்படி பட்டையைக் கிளப்பும் என்று யாருக்கு தெரியும்!? ஆனது,ஆகட்டும்…நீங்க பாட்டுக்கு கொண்டாடுங்க மக்கா.அமேசான் தயவுல உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் இன்னொரு முறை பார்க்கப்போகிறார்கள் என்பதும் கெத்துதான்!