விஸ்வாசம் படத்தில் தல அஜித் இரண்டு வேடத்தில் நடிக்கிறாரா? இயக்குநர் சிவா ஓபன் டாக்!

 

விஸ்வாசம் படத்தில் தல அஜித் இரண்டு வேடத்தில் நடிக்கிறாரா? இயக்குநர் சிவா ஓபன் டாக்!

நடிகர் அஜித் விஸ்வாசம் படத்தில் இரண்டு வேடங்களில்  நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், படத்தில் இயக்குநர் சிவா விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: நடிகர் அஜித் விஸ்வாசம் படத்தில் இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், படத்தில் இயக்குநர் சிவா விளக்கம் அளித்துள்ளார்.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, படங்களை தொடர்ந்து 4வது முறையாக அஜித்-சிவா கூட்டணியில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. பக்கா ஃபேமிலி எண்டர்டெய்ன்மென்ட் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். ரசிகர்கள் மட்டுமல்லாது வெகுஜன மக்களிடமும் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தில் அஜித்,  இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்பட்டது. படத்தின் மோஷன் போஸ்டரிலும் இரண்டு கெட்டப்பில் அஜித் இருந்ததால், இந்த சந்தேகம் ரசிகர்கள் மத்தியில்  எழுந்தன. ஆனால், விஸ்வாசம் படத்தில் ஒரு அஜித் தான் என்று இயக்குநர் சிவா தெளிவுபடுத்தியுள்ளார்.

விஸ்வாசம் படம் தொடர்பாக பேசிய அவர், ‘தேனி மாவட்டத்தில் கொடுவிலார்பட்டி என்கிற கிராமத்தில் நடக்கும் கதை இது. வெளியே வீரமாகவும், உள்ளுக்குள்ளே வெள்ளந்தியாகவும் வாழும் மனிதர்களின் உணர்வுபூர்வமான சம்பவங்கள்தான் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஒரே ஒரு வேடம்தான். முரட்டு மீசையோடு அலப்பறையான தடாலடி ஆசாமி ‘தூக்குதுரை’ அஜித். முதல்பாதியில் கிராமத்தில் பட்டைய கிளப்பும் அஜித், இரண்டாம் பாதியில் நகரத்தில் துவம்சம் செய்கிறார். இதில் அஜித் முதல்முறையாக மதுரை தமிழில் பேசி அசத்தியிருக்கிறார். ஒரு கிராமத்து ஆள் எப்படி இருப்பாரோ அதே உடல்மொழி, பேசுற விதம், துறுதுறுப்பு, துள்ளல்னு பக்காவா தன்னைத் தயார் படுத்திட்டு நடித்துள்ளார்’ என்று விளக்கமளித்துள்ளார்.