விஸ்வாசம் படத்தில் அஜித்துக்காக விவேக் எழுதிய வசனம்

 

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்காக விவேக் எழுதிய வசனம்

விஸ்வாசம் திரைப்படத்தில் தல அஜித்துக்காக வசனம் எழுதிய நடிகர் விவேக், குறிப்பிட்ட அந்த காட்சியில் ’தல’ உடன் இணைந்து நடித்துள்ளார்

சென்னை: விஸ்வாசம் திரைப்படத்தில் தல அஜித்துக்காக வசனம் எழுதிய நடிகர் விவேக், குறிப்பிட்ட அந்த காட்சியில் ’தல’ உடன் இணைந்து நடித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் படம் நேற்று வெளியானது. அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் குடும்ப உறவுகளை பின்னிப் பிணைந்து உணர்ச்சி மயமாக எடுக்கப்பட்டுள்ளது . படத்தில் முதல் பாதியில் தம்பிராமையா, ரோபோ சங்கர் ஆகியோர் இருந்தும் காமெடி காட்சிகள் குறைவாக இருக்கிறது என்பது ரசிகர்களின் குறையாக இருக்கிறது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதியில் வரும் விவேக் லேசாக கலகலப்பூட்டுகிறார். 

இந்தக் காட்சிக்கான காமெடியை விவேக்கே எழுதி கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஒரு படத்தில் அஜித் பேசும் வசனத்தை அஜித்திடமே பேசிக்காட்டி அவரை மிரட்டுவார். அதை அஜித் எப்படி  கவுண்டர் கொடுத்து கலாய்ப்பார் என்பதை படித்து விட்டு அஜித்தே ரசித்திருக்கிறாரம். ஆனால் படத்தின் நீளம் கருதி அந்த காட்சிகள் படமாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.