‘விஸ்வாசம்’ திருவிழா: அரைமணி நேரத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்; ரசிகர்கள் உற்சாகம்!

 

‘விஸ்வாசம்’ திருவிழா: அரைமணி நேரத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்; ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள  ‘விஸ்வாசம்’ படத்தின் முன்பதிவிற்கான டிக்கெட் சமூக வலைதளங்களில் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது.

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள  ‘விஸ்வாசம்’ படத்தின் முன்பதிவிற்கான டிக்கெட் சமூக வலைதளங்களில் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸை குவித்தது.  அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.விஸ்வாசம் திரைப்படம் பொங்கல் விழாவையொட்டி  வெளியாகவுள்ளதால் அஜித் ரசிகர்கள் இப்போதே பல திரையரங்குகளில் பேனர், கட் அவுட்டுகள் வைத்து அசத்த ஆரம்பித்துள்ளனர்.
 

viswasam

இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு சமூக வலைதளங்களில் நேற்று தொடங்கிய  சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது.  சென்னையில் சத்யம் சினிமாஸில் ‘விஸ்வாசம்’ ப்ரீ-புக்கிங் துவங்கிய அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல்லாகின.

‘விஸ்வாசம்’ திரைப்படம் ரிலீஸாகும் அதே நாளில், ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் முன்பதிவில் அஜித் ரசிகர்கள்  முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.