விஸ்வாசம் செகண்ட் லுக்: பொங்கலுக்கு புல்லட்டில் வரும் தல அஜித்!

 

விஸ்வாசம் செகண்ட் லுக்: பொங்கலுக்கு புல்லட்டில் வரும் தல அஜித்!

தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, படங்களை தொடர்ந்து 4வது முறையாக அஜித்-சிவா கூட்டணியில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. பக்கா ஃபேமிலி எண்டர்டெய்ன்மென்ட் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று (25.10.2018) வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு ரிலீஸாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. திருவிழா பின்னணியில் புல்லட்டில் ஹாப்பியாக வரும் அஜித், வேட்டி சட்டையில் வருவது ‘வீரம்’ படத்தை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளது. பக்கா மாஸ் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்ப்பார்த்த தல ரசிகர்கள் இந்த செகண்ட் லுக் போஸ்டரால் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.

பக்கா ஃபேமிலி எண்டர்டெய்ன்மென்ட் படமாக உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக போஸ்டரில் பொங்கல் 2019 என்று குறிப்பிடப்பட்டுள்ளது தல ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.