விஸ்வாசம் கண்டிப்பாக பிளாக் பஸ்டர் ஹிட்: அடிச்சி சொல்லும் மணிரத்தினம் படத்தின் நடிகர்!! 

 

விஸ்வாசம் கண்டிப்பாக பிளாக் பஸ்டர் ஹிட்: அடிச்சி சொல்லும் மணிரத்தினம் படத்தின் நடிகர்!! 

நடிகர் அருண்விஜய் விஸ்வாசம் படம் பார்த்து தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

சென்னை: நடிகர் அருண்விஜய் விஸ்வாசம் படம் பார்த்து தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தல ரசிகர்கள், அவருக்கு பேனர்கள் வைத்து அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.மேலும் தல தரிசனத்திற்காகச் சிறப்பு காட்சிகளைக் காண நள்ளிரவு முதலே அவரது ரசிகர்கள் தியேட்டர்கள் முன் கூடிவிட்டனர். தல ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் திரைப்படம் ரசிக்க வைப்பதாகக் கூறப்படுகிறது. குடும்ப படமான ‘விஸ்வாசம்’திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளம் உள்ளது. விஸ்வாசம் படத்தை பார்த்த பின் பிரபலங்கள் பலர் தங்கள் கருத்துக்களையும், வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர். 

arun vijay

இந்நிலையில், நடிகர் அருண்விஜய் விஸ்வாசம் படம் பார்த்து பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில் “விஸ்வாசம் அனைவருக்கும் ஒரு ட்ரீட்,இது சூப்பர் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். மேலும் இதை ரசிகர்களுடன் பார்த்தது நன்றாக இருந்தது.கண்டிப்பாக இது பிளாக் பஸ்டர் திரைப்படம் என்றும் முழு டீம்க்கு தனது வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.