‘விஸ்வாசம்’: இது தான் தல அஜித்தின் இண்ட்ரோ பாடலா?

 

‘விஸ்வாசம்’: இது தான் தல அஜித்தின் இண்ட்ரோ பாடலா?

தல அஜித் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்தில் அவருக்காக எழுதப்பட்ட அறிமுக பாடலின் முதல் வரி லீக்கானதாக கூறப்படுகிறது.

சென்னை: தல அஜித் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்தில் அவருக்காக எழுதப்பட்ட அறிமுக பாடலின் முதல் வரி லீக்கானதாக கூறப்படுகிறது.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ திரைப்படங்களை தொடர்ந்து 4வது முறையாக இயக்குநர் சிவா மற்றும் அஜித் கூட்டணியில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பிரத்யேகமாக செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது. முதன் முறையாக அஜித் படத்துக்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். விஸ்வாசம் படத்துக்கு பாடலாசிரியர் அருண் பாரதி பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

அதில் தல அஜித்தின் மாஸ் இண்ட்ரோவுக்கு அவர் எழுதிய பாடல் குறித்து அருண் பாரதியே பேசியுள்ளார். ‘எத்தனை உயரம் இமய மலை, அதுல இன்னொரு சிகரம் எங்க தல’ என்ற அஜித்தின் அறிமுக பாடல் வரிகளை அருண் பாரதி வெளியிட்டுள்ளார்.

Viswasam

இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலை வரும் ஆயுத பூஜைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், ரோபோ ஷங்கர், யோகி பாபு, ரவி ஆவனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.