விஸ்வரூபம் பட பிரச்னையில் ஜெ. தப்பு கணக்குப் போட்டார் – கமல்!

 

விஸ்வரூபம் பட பிரச்னையில் ஜெ. தப்பு கணக்குப் போட்டார் – கமல்!

விஸ்வரூபம் படத்தின் தொலைகாட்சி உரிமையை ஜெயா டிவிக்கு தருமாறும், அதற்கு விலையாக ஒரு பெரிய தொகையை தர ஜெயலலிதா முன்வந்ததாகவும், இந்த டீலிங்கை முதலமைச்சர் ஜெயலலிதாவே நேரடியாக பேசியதாலும், அவர் சொன்ன தொகை தமக்கு மிகவும் பிடித்திருந்ததால், டீலுக்கு ஓகே சொன்னதாகவும், ஆனால், தொகையில் பெரும்பகுதி கருப்புப் பணமாக வழங்கப்படும் என்பதை தாம் மறுத்ததால், ஜெயலலிதா கோபம்கொண்டு படத்திற்கு தடை விதித்ததாகவும் கமல் அப்புத்தகத்தில் விளக்கியுள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு விஸ்வரூபம் சென்சார் முடிந்து, சான்றிதழ் வாங்கி வெளியாக தயாரானபோது, முஸ்லீம்களை மோசமானவர்களாக படத்தில் சித்தரித்திருக்கிறார்கள், எனவே தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படும், ஆகையால் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட அனுமதிக்க முடியாது என தமிழக அரசு அறிவித்தது. இதுபோக, தியேட்டரில் படம் வெளியாகும் அதேநேரத்தில் டிடிஹெச்சிலும் படத்தை வெளியிட கமல் முயற்சித்து, தியேட்டர் அதிபர்கள் ஒருபக்கம் மூக்கை சிந்திக்கொண்டிருந்தனர். நீதிமன்றத்துக்கு சென்று கமல் படத்தை வெளியிட உத்தரவு பெற்றுவந்தாலும், படத்தை வெளியிட முடியவில்லை.

Kamal

எவ்வளவு முக்கிய பிரச்னை என்றாலும் பத்ரிகையாளர்களை சந்திக்காத ஜெயலலிதா, விஸ்வரூபம் பிரச்னையில் தாமாக முன்வந்து பத்ரிகையாளர்கள் சந்திப்பை நடத்தவேண்டிய அளவுக்கு படம் பேசுபொருளானதும், இந்தப் பிரச்னையில் சுமூக தீர்வு ஏற்படாவிட்டால், வேறு ஏதேனும் நாட்டிற்கு தாம் செல்லவிருப்பதாகவும் கமல் தெரிவித்ததெல்லாம் பக்கா ஆக்சன் பட மெட்டீரியல். படம் வெளியான அன்று ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா என பக்கத்து மாநிலங்களுக்கு சென்று படம்பார்த்து சமூக வலைதளங்களில் நேர்மறை விமர்சனங்கள் பதியப்பட்டு, ஒருவழியாக தமிழ்நாட்டிலும் ரிலீஸாகி பெருவெற்றியைப் பெற்றது விஸ்வரூபம் (முதல் பாகம் மட்டும்).

Kamal Jayalalitha

இந்த களேபரங்களுக்கு காரணமான திரைமறைவு காரணங்கள் குறித்து கமல் இப்போது தெளிவுபடுத்தியுள்ளார். Defining India: Through Their Eyes என்ற புத்தகம் வெளியாகி இருக்கிறது. எழுதியவர் சோனியா சிங். இந்தப் புத்தகத்தில் விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசனுக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையேயான பிரச்னை என்ன என்பது குறித்து கமல விலாவாரியாக விளக்கியிருக்கிறார்.

Defining India: Through Their Eyes

அதில், விஸ்வரூபம் படத்தின் தொலைகாட்சி உரிமையை ஜெயா டிவிக்கு தருமாறும், அதற்கு விலையாக ஒரு பெரிய தொகையை தர ஜெயலலிதா முன்வந்ததாகவும், இந்த டீலிங்கை முதலமைச்சர் ஜெயலலிதாவே நேரடியாக பேசியதாலும், அவர் சொன்ன தொகை தமக்கு மிகவும் பிடித்திருந்ததால், டீலுக்கு ஓகே சொன்னதாகவும், ஆனால், தொகையில் பெரும்பகுதி கருப்புப் பணமாக வழங்கப்படும் என்பதை தாம் மறுத்ததால், ஜெயலலிதா கோபம்கொண்டு படத்திற்கு தடை விதித்ததாகவும் கமல் அப்புத்தகத்தில் விளக்கியுள்ளார். “படத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஜெயலலிதா காலில் விழவேண்டும் என எனக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால், எனது சுயமரியாதையைக் காக்க நான் எந்த அளவிற்குச் செல்வேன் என்பதைக் கணிப்பதில் ஜெயலலிதா தப்புக் கணக்கு போட்டுவிட்டார் ” என்பது கமலின் எண்ட் பஞ்ச்.