விஸ்வரூபம் எடுக்கும் விஸ்வாசம் திருவிழா

 

விஸ்வரூபம் எடுக்கும் விஸ்வாசம் திருவிழா

தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படத்தின் ரிலீசையொட்டி தல ரசிகர்கள் விஸ்வாசம் திருவிழாவை அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.

சென்னை: தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படத்தின் ரிலீசையொட்டி தல ரசிகர்கள் விஸ்வாசம் திருவிழாவை அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ வரிசையில் 4வது முறையாக இயக்குநர் சிவா-அஜித் கூட்டணியில் உருவாகியுள்ளது ‘விஸ்வாசம்’ திரைப்படம். இதில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

viswasam

இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், வானுயர் கட்-அவுட்கள், பிரம்மாண்ட போஸ்டர்கள் என தல ரசிகர்கள் விஸ்வாசம் திருவிழாவிற்கு ஆயத்தமாகி உள்ளனர். திரையரங்குகளின் முன் விஸ்வாசத்தை காட்ட தல ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

viswasam

இதனிடையே விஸ்வாசம் டீசரை வெளியிடக் கோரி தல ரசிகர்கள் விஸ்வாசம் டீமிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். டி.இமான் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகின்றன. அப்பா-மகள் பாசத்தை வெளிப்படுத்தும் மெலடி பாடலான ‘கண்ணான கண்ணே’ பாடல் அப்பாக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.