விஸ்வரூபம் எடுக்கும் தொற்றுநோய்….. நம் நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது…

 

விஸ்வரூபம் எடுக்கும் தொற்றுநோய்….. நம் நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது…

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி விட்டது.

கொரோனா வைரஸ் நம் நாட்டில் நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. தொற்று நோய் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையிலும், கொரேனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. 

மருத்துவ பரிசோதனை

மாநிலங்கள் அறிக்கையின்படி நேற்று இரவு வரை, கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,188ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் 329ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் மற்றும் உயிர்பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,982ஆக உயர்ந்துள்ளது. மேலும் 149 பேர் அம்மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 

கொரோனா வைரஸ்

தற்போது நம் நாட்டில் 350 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கடந்த 6 நாட்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 6ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4,700ஆக இருந்தது. அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இருமடங்காக அதிகரிக்கும் வேகம் 4.2 நாட்களாக இருந்தது. இது தற்போது நம் நாட்டில் கொரோனா வைரஸ் இருமடங்காக அதிகரிக்கும் வேகம் குறைந்துள்ளதை வெளிப்படுத்துவதாக உள்ளது