விஸ்வரூபமெடுக்கும் இயக்குநர் கரு.பழனியப்பன்

 

விஸ்வரூபமெடுக்கும் இயக்குநர் கரு.பழனியப்பன்

 

karupalaniappan

ரஜினி போர் அறிவித்ததும் அரசியலுக்கு வருவேன் என்று சொல்ல ஆரம்பித்த தினத்திலிருந்தே சமூக விஷயங்களில் இயக்குநர் கரு.பழனியப்பனின் பெயர் அதிகமாக அடிபட்டது. காரசாரமான தொலைக்காட்சி விவாதங்களிலும், நீட் தேர்வு, ஸ்டெர்லைட் பிரச்சினை என்று தமிழர்களுக்காக தவறாமல் எல்லா விஷயங்களில் தனது குரலை பதிவு செய்த கரு.பழனியப்பன் தற்போது எழுத்தாளர் சந்திராவின் இயக்கத்தில் ‘கள்ளன்’ திரைப்படம் மூலமாக விஸ்வரூபமெடுத்திருக்கிறார்.
பரட்டைத்தலை, வாழ்க்கையின் எல்லா கட்டங்களிலும் போராடி களையிழந்து போன உடம்பு, எதிர்கால கனவுகளை கண்களில் தேக்கி வைத்திருக்கும் பார்வை என்று ஆளே அடையாளம் தெரியாமல் அதிரடியாய் களமிறங்கியிருக்கிறார் கரு.பழனியப்பன்.
‘கள்ளன்’ படம் தமிழர்களின் அரசியலைப் பேசும். தமிழர்களின் வாழ்வியலையும், நிலவியலையும் பேசும் என்று இப்பொழுதே கோடம்பாக்கத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். ‘கள்ளன்’ படத்தின் மூலமாக ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே கரு.பழனியப்பன் வேறு விதமான எண்ட்ரிக்கு தனக்குத் தெரிந்த கலையின் மூலமாக களமிறங்குகிறார் என்று உற்சாகமாகியிருக்கிறார்கள் திரையுலகினர்.