விஸ்கிக்கு ஆசைப்பட்டு ரூ.26 ஆயிரத்தை இழந்த மருத்துவர்…ஆன்லைன் ஆர்டரில் நடந்த மோசடி!

 

விஸ்கிக்கு ஆசைப்பட்டு ரூ.26 ஆயிரத்தை இழந்த மருத்துவர்…ஆன்லைன் ஆர்டரில் நடந்த  மோசடி!

மருத்துவர் ஒருவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை மது அருந்த வேண்டும் நினைத்துள்ளார்.

புனே ஹடாஸ்பர் பகுதியில் வசித்து வரும் மருத்துவர் ஒருவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை மது அருந்த வேண்டும் நினைத்துள்ளார். ஆனால் அதற்குள் மது கடைகள் மூடிவிட்டன. என்ன செய்வது என்று தெரியாமல்  யோசித்தவருக்கு ஆன்லைனில் மதுவை ஆர்டர் செய்யலாம் என்ற யோசனை பீறிட்டு வந்துள்ளது. உடனே செல்போனில் ஆன்லைனில் விஸ்கியை ஆர்டர் செய்ய முடியுமா எனத் தேடியுள்ளார். அவர் கண்களில் சன்னி ஒயின் ஷாப் என்ற  இணையதளம்  ஒன்று தென்பட்டது.

ttn

அதில் நம்பருக்கு போன் செய்து கேட்க, எதிர்முனையில் டெபிட் கார்டு நம்பர் மற்றும் ஓ.டி.பி ஆகியவற்றைக் கேட்டுள்ளார். விஸ்கி கிடைக்க போகிறது என்ற ஆர்வத்தில் அந்த மருத்துவரும் டெபிட் கார்டு நம்பர் மற்றும் ஓ.டி.பி ஆகியவற்றைச் சொல்லிவிட்டு விஸ்கிக்காக காத்திருந்தார்.

ttn

ஆனால், விஸ்கி பாட்டில் அவரின் வீட்டிற்கு டெலிவரி வரவில்லை. மேலும், அந்த தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.  இதை தொடர்ந்து  அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.26,652 எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது அப்போது தான்  ஏமாந்தது அந்த மருத்துவருக்குத் தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்க, புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.