விஷ்ணு விஷால் பிறந்த நாள் பரிசாக எப்.ஐ.ஆர்: விவரம் இதோ… 

 

விஷ்ணு விஷால் பிறந்த நாள் பரிசாக எப்.ஐ.ஆர்: விவரம் இதோ… 

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த படத்தில் பரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

சென்னை: விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த படத்தில் பரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

ராட்சசன் படத்தின் மாபெரும் வரவேற்பு பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் எதிர்பார்த்தளவு வரவேற்பைப் பெறவில்லை. அதனால் அவர் தனது அடுத்த படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில், எப்.ஐ.ஆர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதில் முதல் முறையாக இவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் இணைந்து நடித்து வருகிறார். எஃப்.ஐ.ஆர்  படத்தின் பரஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதில், பைசல் இப்ராகிம் ராய்ஸ் என்று எஃப்.ஐஆருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில்,விஷ்ணு விஷாலின் முகம் வெறும் கண்கள் மட்டுமே தெரியும் படி துணியால் கட்டப்பட்டுள்ளது. பின்னணியில் ‘ஐ.எஸ்.அமைப்பைச் சேர்ந்த சென்னை வாலிபர்கள் கைது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இதில் விஷ்ணு விஷால் தீவிரவாதியாக நடிக்கிறாரா, அல்லது அவர்களைப் பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறாரா? என்பது தெரியவில்லை.