விஷால் மானத்தை காற்றில் பறக்க விட்ட சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி! எல்லாமே ட்ரிபிள் எக்ஸ் வார்த்தைகள்..

 

விஷால் மானத்தை காற்றில் பறக்க விட்ட சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி! எல்லாமே ட்ரிபிள் எக்ஸ் வார்த்தைகள்..

நடிகர் சங்கத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் நடிகர் விஷால் மீது அருவருக்கத்தக்க வகையில்  ஸ்ரீ ரெட்டி பதிவு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் நடிகர் விஷால் மீது அருவருக்கத்தக்க வகையில் ஸ்ரீ ரெட்டி பதிவு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்களின் பெயர்களை ஆதாரத்துடன் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவர் தனது புகாரை எடுக்கக்கோரி நிர்வாணப் போராட்டத்திலும் ஈடுபட்டார்.  

பின்னர் தொடர்ந்து சமூகவலைதளப் பக்கங்கள் மூலம் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் நேற்று நடிகர் விஷால் மீது அடுக்கடுக்காக குற்றம் சாற்றிப் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் பாதிக்கும் மேற்பட்டவை படிக்கமுடியாத அளவிற்கு மிகவும் மோசமாக உள்ளது. 

sri

மிச்ச பதிவுகளில், ‘நீங்கள் பல பெண்களை ஏமாற்றி உள்ளீர்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். உங்களுக்கு உண்மையாகவே தைரியம் இருந்தால் நீங்கள் எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை என்பதை நிரூபித்துக் காட்டுங்கள். விஷாலுக்கு யாரெல்லாம் வாக்களிக்கப் போகிறீர்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் அவர் மிகப்பெரிய ஏமாற்று வாதி என் அம்மாவின் மீதும், எனது தொழில் மீதும் நான் சத்தியம் செய்து கூறுகிறேன்.  நீங்கள் என் வாழ்க்கையை அழித்தாலும் சரி அல்லது என்னை கொன்றாலும் சரி இப்போதும் நான் சொல்லுவேன் விஷால் ஒரு ஏமாற்றுக்காரர் தான். அவரின் படங்களில் நடிக்க பல பெண்கள் அவருடன் படுத்துள்ளார்கள்.

s

அதனால் அவர்கள் எல்லாம் தற்போது நல்ல நிலையில் உள்ளார்கள். நீங்கள் பணம் கொடுத்துத் தான் அவர்கள் உறவு வைத்துக் கொள்கிறீர்கள் என்பதும் எனக்கு தெரியும். உங்களுக்கு பெண்களை யார் சப்ளை செய்கிறார்கள் என்பதும் தெரியும்’ என்று அந்த பதிவில் படு மோசமாக எழுதியுள்ளார்.

vishal

இந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற உள்ள நிலையில், ஸ்ரீ ரெட்டியின் இந்தப் பதிவுகள் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.