விஷால்/பாக்யராஜ் உஷாரா இருங்க, பின்னாடிஃபீல் பண்ணி பிரயோசனம் இல்ல!

விஷால்/பாக்யராஜ் உஷாரா இருங்க, பின்னாடிஃபீல் பண்ணி பிரயோசனம் இல்ல!

பாக்யராஜ் அணியைச் சேர்ந்தவர்களின் பிரசாரத்தின் முக்கிய அம்சம் “விஷால் தன் இமேஜை வளர்த்துக்கொள்வதற்காக மட்டுமே செயல்படுகிறார். விஷாலின் தன்னிச்சையான செயல்பாடுகள் உறுப்பினர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. பாண்டவர் அணியில் எங்களுக்கு சில ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர். அவர்கள் எங்கள் அணிக்குத்தான் வாக்களிப்பார்கள். தேர்தலில் வெற்றிபெற்றால், ஒவ்வொரு மாதமும் சங்க மூத்த கலைஞர்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும்” என்பதாகும்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடிகர் சங்க தேர்தல் நடைபெறவேண்டும். கடைசியாக 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பல்வேறு சவால்கள், அறிவிப்புகள், முட்டல்கள், மோதல்கள், நாடகங்களுக்கு மத்தியில் விஷால் இடம்பெற்ற நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றிபெற்றது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற  அந்த தேர்தல்கூட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தேர்தல்தான். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தல் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய், இப்போதுதான் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வரும் ஞாயிறு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல்கூட நடைபெறாது வேணும்னா பாருங்க என ராதாரவி வேறு ஒருபக்கம் தனியாக காய் உருட்டிக்கொண்டிருக்கிறார்.

Bhagyaraj Team

முந்தைய தேர்தலின்போது விஷால் அணியிலிருந்த நடிகர் உதயா, அவருடைய படத்தின் ஒன்லைன் விமர்சனத்தை தாங்கமுடியாமல் கோவித்துக்கொண்டுபோய் எதிரணியில் ஐக்கியமாகிவிட்டார். முந்தைய தேர்தலில் விஷாலுக்கு ஆதரவாக இருந்து ‘பலவற்றையும்’ கவனித்துக்கொண்டு, தேர்தல் முடிந்த கையோடு விஷால் எதிரணிக்கு தாவிய  ஜே.கே. ரித்திஷ் அகால மரணமடைந்துவிட்டார். அவருடைய இடத்தை நிரப்ப மற்றொரு கஜானாவான ஐசரி கணேஷ் எதிரணியால் பெரிதும் நம்பப்படுகிறார். இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் ஒட்டுமொத்த திரையுலகமே தங்களுக்கு ஆதரவு கொடுப்பதாக பாக்யராஜ தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியைச் சேர்ந்தவர்கள் நம்புகின்றனர்.

Vishal Team

பாக்யராஜ் அணியைச் சேர்ந்தவர்களின் பிரசாரத்தின் முக்கிய அம்சம் “விஷால் தன் இமேஜை வளர்த்துக்கொள்வதற்காக மட்டுமே செயல்படுகிறார். விஷாலின் தன்னிச்சையான செயல்பாடுகள் உறுப்பினர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. பாண்டவர் அணியில் எங்களுக்கு சில ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர். அவர்கள் எங்கள் அணிக்குத்தான் வாக்களிப்பார்கள். தேர்தலில் வெற்றிபெற்றால், ஒவ்வொரு மாதமும் சங்க மூத்த கலைஞர்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும்” என்பதாகும்.

Amit Shah

தேர்தலுக்காக பிரசாரம் பண்றது சரி, வாக்குறுதி தர்றது சரி, ஆனா எக்காரணத்தை முன்னிட்டும் தேர்தல் ஆணையத்துகிட்ட இருக்குற வாக்கு எந்திரத்தை மட்டும் தேர்தலுக்கு பயன்படுத்திடாதீங்க. அப்புறம் அமித் ஷா தலைவராகிடுவாரு, அவ்வளவுதான் சொல்லமுடியும்!