விஷால் பட இயக்குநரோடு கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் 

 

விஷால் பட இயக்குநரோடு கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தை வெங்கட் மோகன் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தை வெங்கட் மோகன் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படம் படு தோல்வி அடைந்தது. அதைத்தொடர்ந்து வரிசையாகக் கையில் 4 படங்கள் வைத்து இருக்கும் இவர் தற்போது  பி.எஸ்.மித்ரன் இயக்கி வரும் ஹீரோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

சிவகார்த்திகேயன்

இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
முன்னதாக வெங்கட் மோகன் விஷால் நடிப்பில் வெளியான ‘அயோக்யா’ திரைப்படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.