விஷால் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடும் சன்னி லியோன்?

 

விஷால் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடும் சன்னி லியோன்?

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், விஷால் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், விஷால் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆபாச படங்களை தவிர்த்து பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் நடிகை சன்னி லியோன் தற்போது தென்னிந்திய ரசிகர்களுக்காக முழு நீள தமிழ் படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று சரித்திர படமாக உருவாகி வரும் ‘வீரமாதேவி’ படத்தில் நடித்து வரும் சன்னி லியோன், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷாலில் படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கத்தில் ‘அயோக்யா’ படத்தில் விஷால் நடித்து வருகிறார். இது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் நடித்த ‘டெம்பர்’ படத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். இப்படம் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் ’சிம்பா’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது.

இந்நிலையில், விஷால் நடிக்கும் அயோக்யா படத்தில் அவருக்கு ஜோடியாக ‘இமைக்கா நொடிகள்’ நடிகை ராஷி கண்ணா நடித்து வருகிறார். இப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடிகை சன்னி லியோன் கவர்ச்சி நடனமாடவிருப்பதாக கூறப்படுகிறது.