விஷாலை வெளுத்து வாங்கும் வரலட்சுமி | சூடு பிடிக்கும் நடிகர் சங்கத் தேர்தல்

 

விஷாலை வெளுத்து வாங்கும் வரலட்சுமி | சூடு பிடிக்கும் நடிகர் சங்கத் தேர்தல்

நடிகர் சங்கத் தேர்தல் சூடி பிடிக்கத் தொடங்கியுள்ளது. சென்ற முறை நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையில் வென்ற அணியே, இம்முறையும் அதே ‘பாண்டவர் அணி’ என்கிற பெயரில் களத்தில் இறங்குகிறார்கள். விஷால் நடிகர் சங்க கட்டிடத்தை முழுவதும் கட்டி முடிப்பேன்’ என்று போன முறை கூறிய அதே வாக்குறுதியை இம்முறையும் கூறி வாக்கு கேட்டு வருகிறார்.

நடிகர் சங்கத் தேர்தல் சூடி பிடிக்கத் தொடங்கியுள்ளது. சென்ற முறை நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையில் வென்ற அணியே, இம்முறையும் அதே ‘பாண்டவர் அணி’ என்கிற பெயரில் களத்தில் இறங்குகிறார்கள். விஷால் நடிகர் சங்க கட்டிடத்தை முழுவதும் கட்டி முடிப்பேன்’ என்று போன முறை கூறிய அதே வாக்குறுதியை இம்முறையும் கூறி வாக்கு கேட்டு வருகிறார். இவர்களுக்கு எதிராக, சரத்குமாரும், ராதாரவியும் இம்முறை போட்டியில் இல்லை என்றாலும், இயக்குநர் பாக்யராஜ் தலைமையில் ஓர் அணி ‘சங்கரதாஸ்’ அணி என்கிற பெயரில் போட்டியாக களமிறங்குகிறது.

vishal

இந்நிலையில், 
‘பாண்டவர் அணிக்கு’ வாக்குகள் கேட்டு விஷால் வெளியிட்டிருந்த ஒரு வீடியோ பரபரப்பாகியிருக்கிறது. முழுவதுமாக சரத்குமாரையும், ராதாரவியும் குற்றம் சாட்டுவது போலுள்ள அந்த வீடியோவை ட்விட்டரில் விஷால் பதிவு செய்திருந்த நிலையில், விஷாலை வெளுத்து வாங்கியிருக்கிறார் நடிகையும், சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி.
தமிழ் சினிமா பிரபலங்களில் நண்பர்களாக இருந்தவர்கள் விஷால்-வரலட்சுமி. இடையில் அவர்கள் காதலிக்கிறார்கள், திருமணம் செய்வார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது. ஆனால் விஷாலுக்கு, அனிஷா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது.  

சரத்குமாரை எதிர்த்து சென்ற முறை தேர்தலில் விஷால் களமிறங்கியப் போதும், வரலட்சுமி விஷாலுக்கு ஆதரவாகவே இருந்தார். இந்நிலையில், வீடியோவை பார்த்த வரலட்சுமி, ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘வீடியோவை பார்த்த பிறகு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். உங்கள் மீது வைத்திருந்த மரியாதை முற்றிலுமாக போய்விட்டது. எனது அப்பா இந்த முறை தேர்தலில் தலையிடவில்லை என்றாலும் அவரை தவறாக கூறியுள்ளீர்கள். நீங்கள் செய்த நல்லதை வெளிப்படுத்தாமல் தவறாக விமர்சனம் செய்கிறீர்கள். திரையில் இல்லாவிட்டாலும், நிஜத்தில் நல்ல நடிகன் என்று பெயர் வாங்கியிருக்கிறீர்கள்.  என்னுடைய ஓட்டை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என கோபமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி. டாப் தமிழ் நியூஸ் நேயர்களுக்காக அந்த அறிக்கை அப்படியே…