விஷாலுக்கு வில்லன் கே.பாக்யராஜ்!

 

விஷாலுக்கு வில்லன் கே.பாக்யராஜ்!

நாசர் அணியை யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக நாசரை எதிர்த்து கே.பாக்யராஜும், பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத் தலைவர்கள் பதவிக்கு குட்டி பத்மினி, நடிகர் உதயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் களம் காண்பதால் நடிகர் சங்க தேர்தல் சூடு பிடித்துள்ளது.

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் 23-ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 7-ந் தேதி தொடங்குகியது. மனுதாக்கல் செய்ய 10-ந் தேதி கடைசி நாள். மனுக்களை 14-ந் தேதி வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலை வெளியாகிறது. கடந்த தேர்தலைப்போலவே பாண்டவர் அணியில் இந்த தேர்தலிலும் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். கார்த்தி பொருளாளர் பதவிக்கு நிற்கிறார். அவர்கள் அணி சார்பாக செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

Bhagyaraj and Team

நாசர் அணியை யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக நாசரை எதிர்த்து  கே.பாக்யராஜும், பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத் தலைவர்கள் பதவிக்கு குட்டி பத்மினி, நடிகர் உதயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் களம் காண்பதால் நடிகர் சங்க தேர்தல் சூடு பிடித்துள்ளது