விஷாலுக்கு ஜோடியாகும் ‘துல்கர் சல்மான்’ நாயகி!

 

விஷாலுக்கு ஜோடியாகும் ‘துல்கர் சல்மான்’ நாயகி!

 இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

விஷாலின் ஆக்ஷன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அதை தொடர்ந்து விஷால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து  வருகிறார். அதேசமயம்  அறிமுக இயக்குநர்  ஆனந்த் இயக்கத்தில் ’சக்ரா’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.  இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

ttn

இந்நிலையில் அரிமா நம்பி மற்றும் இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் படத்திலும் விஷால் நடிக்க  உள்ளார். இதில் விஷால் ஜோடியாக ரிது வர்மா நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே விக்ரம் ஜோடியாகத் துருவ நட்சத்திரம், துல்கார் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’படங்களில் நடித்துள்ளார்.

ttn

மேலும் இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.