விவோ ஒய்91 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

விவோ ஒய்91 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

விவோ ஒய்91 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை: விவோ ஒய்91 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ நிறுவனம் தனது ஒய் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வரிசையில் தற்போது புதிய ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. அது விவோ ஒய்91 ஆகும். இதன் சிறப்பம்சங்களாக 6.2 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, ஹீலியோ P22 ஆக்டா-கோர் 12 என்.எம். பிராசஸர், 2 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 13 எம்.பி + 2 எம்.பி டுயல் பிரைமரி கேமரா செட்டப், 8 எம்.பி செல்பி கேமரா, ஃபேஸ் அன்லாக் வசதி, விரல்ரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், 4030 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளது.

விவோ ஒய்91 ஸ்மார்ட்போன் ஸ்டேரி பிளாக், ஓசன் புளு ஆகிய இருவிதமான நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் விவோ அதிகாரப்பூர்வ இணையதளம், பேடிஎம், அமேசான் இந்தியா போன்ற இணையதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஷோரூம்களில் ரூ.10,990 விலையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 3000 ஜிபி டேட்டா மற்றும் ரூ.4000 மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது. அதேபோல ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.2000 கேஷ்பேக் மற்றும் 240 ஜிபி டேட்டா அளிக்கப்படுகிறது. இதுதவிர பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.400 கூடுதல் தள்ளுபடி மற்றும் இ.எம்.ஐ வாய்ப்பும் வழங்கப்படுகிறது.