விவி மினரல்ஸ் குழுமத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்

 

விவி மினரல்ஸ் குழுமத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்

வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் விவி மினரல்ஸ் குழுமத்திற்கு தொடர்புடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது

சென்னை: வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் விவி மினரல்ஸ் குழுமத்திற்கு தொடர்புடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகளவில் தாது மணல் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் வி.வி. மினரல்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அந்நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள், உரிமையாளர் வீடுகள் என 100-க்கும் மேற்பட்ட இடங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 25-ம் தேதி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதே போன்று நெல்லை தூத்துக்குடி, திசையன்விளை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

விவி மினரல்ஸ் நிறுவனங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் தொடரும் நிலையில், அக்குழுமத்திற்கு தொடர்புடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.