விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் தமிழகத்தில் பேனர் வைக்கவில்லை: உயர் நீதி மன்றம் விமர்சனம்.

 

விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் தமிழகத்தில் பேனர் வைக்கவில்லை: உயர் நீதி மன்றம் விமர்சனம்.

நீதி மன்றத்தில் ஆஜரான காவல்துறை மற்றும் மாநகராட்சி ஆய்வாளர்களிடம் உயர்நீதி மன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

நீதி மன்றத்தில் ஆஜரான காவல்துறை மற்றும் மாநகராட்சி ஆய்வாளர்களிடம் உயர்நீதி மன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் தவறி விழுந்ததில் லாரி மீதி மோதி உயிரிழந்தார். அப்பெண்ணின் தந்தை உயர் நீதி மனறத்தில் வழக்கு பதிவு செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் காவல்துறை மற்றும் மாநகராட்சி ஆய்வாளர்கள், மாலை நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி நீதிமன்ற வழக்கை மாலையில் விசாரிக்க ஒத்தி வைத்தது. 

Subasree

தற்போது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆஜராகியுள்ளனர். விசாரணையின் போது, நீதிபதிகள் அவர்களிடம் பேனர் வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

அதற்கு நீதிபதிகள் பேனர் வைத்தவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டுள்ளனர். அதற்கு பேனர் வைத்தவர் மீது வழக்கு பதிவு செய்ய மறந்துவிட்டதாக காவல் துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். 

subasree

அதற்கு நீதிபதிகள், விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் தமிழகத்தில் பேனர் வைக்கவில்லை, உயிர் பலி ஏற்பட்டால் தான் அரசு நிர்வாகம் செயல்படுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இனிமேல் தமிழகத்தில் பேனர் வைக்க மாட்டோம் என்று  உத்தரவு கொடுங்கள் என்று நீதிபதிகள் தரப்பில் வலியுறுத்தியுள்ளனர். 

விபத்து நேர்ந்தவரின் குடும்பத்திற்கு எவ்வளவு கொடுக்க போகிறீர்கள் என்றும் அந்த பணத்தை தவறு செய்த அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து பிடித்து கொள்ளுங்கள் என்றும் பேனர் வைத்தவரிடம் பணத்தை வசூலிக்க வேண்டும் என்றும் நீதி மன்றம் காவல் துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளது உயர் நீதிமன்றம். மேலும் இந்த வழக்கை உயர் நீதி மன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் எனவும் நீதிபதி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.