விவசாய நிலத்தில் விலங்குகளை விரட்ட புதிய கண்டுபிடிப்பு! விவசாயி சாதனை!

விவசாய நிலத்தில் விலங்குகளை விரட்ட புதிய கண்டுபிடிப்பு! விவசாயி சாதனை!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பள்ளேரி கிராமத்தில் ராஜா என்பவர் தனது நிலத்தில் கரும்பை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்தக் கரும்புகளை இரவு நேரங்களில் வருகிற காட்டுப்பன்றிகள் கடித்து நாசம் செய்து வந்துள்ளன. சிறுவயதில் இருந்தே சின்ன சின்னதாக மின்சார சாதனங்களை உருவாக்கும் ஆர்வம் கொண்ட ராஜா, அவற்றை கட்டுப்படுத்த பல்வேறு உத்திகளை முயற்சித்துப் பார்த்து தோல்வி கண்டு, காட்டுப் பன்றிகளை விரட்டவும் சாதனம் ஒன்றை உருவாக்க முடிவு செய்தார்.

farming land

அதன்படி ஒரு ரீ -சார்ஜபிள் பேட்டரி, ஒரு ஒலிப்பெருக்கி, பென் டிரைவ் பொருத்தி இயக்கும் வகையிலான கருவி ஒன்றையும் வைத்து எளிய முறையில் இந்த சாதனத்தை ராஜா வடிவமைத்துள்ளார். இதில் பொருத்தப்பட்டுள்ள பென் டிரைவில் யானையின் பிளிறல், சிறுத்தையின் உறுமல், நரியின் ஊளை ஓசை உள்ளிட்டவற்றை பதிவு செய்து வைத்துள்ளார். அத்துடன் விலங்குகளை விரட்டுவது போன்ற மனிதக் குரலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதனத்தை இயக்கத்துக்கு கொண்டுவந்தவுடன் 5நிமிடங்களுக்கு ஒருமுறை இந்த சப்தங்கள் மாறி, மாறி ஒலிக்கின்றன. இந்த சப்தங்கள் காட்டுப்பன்றிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதால் அவை கரும்புத் தோட்டத்துக்குள் புகுவது இல்லை என்று கூறும் ராஜா, தனது முயற்சி வெற்றியடைந்துள்ளதாகவும் கூறுகிறார்.

raja

இரவு நெருங்கும் வேளையில் இந்த சாதனத்தை இயக்கத்தில் வைத்து விட்டு வீட்டுக்குச் சென்று விடும் ராஜா, காலையில் வந்து பேட்டரியை மட்டும் சார்ஜ் செய்ய தனியே கழற்றி எடுத்துச் சென்று விடுவதாகக் கூறுகிறார். விவசாயி ராஜாவின் இந்த எளிய கண்டுபிடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், மற்ற விவசாயிகளும் இதனை பின்பற்ற அவர் அழைப்பு விடுத்துள்ளார்